இன்று இந்திய குடியரசு தினம்.
குடியரசு என்பதன் அர்த்தம் தெரியுமா?
இந்திய குடியரசு தினம்..!!
நமது இந்திய நாடானது, விடுதலை பெற்ற பிறகு 1950ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் நாளை இந்திய குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.
ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்கு பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசு தினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இந்நாளில் நம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரை நீத்த தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி, கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
குடியரசு என்பதன் பொருள் :
குடியரசு என்றால் குடிமக்களின் அரசு, அதாவது மக்களாட்சி என்று பொருள். தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப் பெயர். 'மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு" என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.
நமது, இந்திய நாடானது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் பெருமைக் கொள்கிறோம். இதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது.
சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட இந்திய நாட்டில் பல வேறுபாடுகள் புதைக்கப்பட்டிருந்தாலும், நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றை வார்த்தையில் பெருமையடைகிறோம்
தன்னுடைய உடலையும் இரத்தத்தையும்
தாய்நாட்டிற்காக தியாகம் செய்தவர்களை
நினைவுக்கூரும் தினம் இது...!
சுதந்திரக்காற்றை சுகமாய்
அனுபவிக்கும் சுற்றி திரியும்
பறவைகளைப் போல
நமக்காக பாடுபட்டு
வாங்கித்தந்த சுதந்திரத்தை
பத்திரப்படுத்தி வாழ்வோமாக.....!
நாடு நம் நாடு
என்பது மட்டும்
மாறாத உணர்வாய்...!
🎈Bright Zoom குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...!!🎈
குடியரசு என்பதன் அர்த்தம் தெரியுமா?
Reviewed by Bright Zoom
on
January 26, 2019
Rating:
No comments: