வரலாற்றில் (பிப்ரவரி:11) -இன்று - எடிசன் பிறந்த தினம் !
"தாமஸ் ஆல்வா எடிசன்"
உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளை கண்டறிந்த தாமஸ் ஆல்வா எடிசன் 1847ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார்.
தன்னுடைய சிறுவயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் 8 வயதில் தான் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பிறகு மூன்றே மாதத்தில் பள்ளியை விட்டு நின்ற இவர், தன்னுடைய அம்மாவிடம் பாடம் கற்றார்.
பார்க்கும் எதையும் சோதித்து அறியும் ஆர்வம் சிறுவயதில் இருந்தே இவருக்கு உண்டு. கோழி அடைகாத்து குஞ்சு பொரிப்பதைப் பார்த்த சிறுவன் எடிசன் தானும் முட்டைகள் மேல் அமர்ந்து சோதனை செய்து பார்த்திருக்கிறான்.
எடிசன் தன்னுடைய 11 வயதிற்குள் ரிச்சர்ட் பார்க்கர், தாமஸ் பைன், சர் ஐசக் நியூட்டன் ஆகியோரின் புத்தகங்கள் உட்பட ஏராளமான புத்தகங்களை கற்றுத் தேர்ந்தார்.
ரயில் நிலையத்தில் பணியாற்றிய போது, 'கிராண்ட் ட்ரங்க் ஹெரால்ட்" வாரப் பத்திரிக்கையை அச்சிட்டு வெளியிட்டார். மேலும் அங்கேயே சோதனைக் கூடம் அமைத்து கண்டுபிடிப்புகளை தொடங்கினார்.
இவர் தன் வாழ்நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். மின்சார பல்பு, எலக்ட்ரிக் ஜெனரேட்டர், டெலிகிராம் சிஸ்டம், எலக்ட்ரிக் ஃபேன், ரேடியோ வால்வ், மெகா போன், மோட்டார், மின்சார இருப்புப்பாதை, தொலைபேசி ஸ்பீக்கர், ஒலிபெருக்கி, கிராமஃபோன், மூவி கேமரா, ராணுவ சாதனங்கள் ஆகியவை இவரது கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்கவை.
ஒரு சாதனையை நிகழ்த்திய பிறகு, அதற்கான பாராட்டுகளைப் பெற அவர் அங்கே இருக்கமாட்டார். அடுத்த கண்டுபிடிப்புக்காக ஆராய்ச்சி கூடத்திற்குள் போயிருப்பார். இதுபற்றி கேட்டால், 'நேற்றைய கண்டுபிடிப்பு பற்றி பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை" என்பார்.
இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று முறையாக எதையும் கற்காமல், உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கையில் சாதனை படைத்த எடிசன் தன்னுடைய 84வது வயதில் (1931) மறைந்தார்.
இவரது உடலை அடக்கம் செய்யும்போது, அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவர் உத்தரவின் படி, அமெரிக்கா முழுவதும் மின் விளக்குகள் ஒரு நிமிடம் அணைக்கப்பட்டன.முக்கிய நிகழ்வுகள்
கிமு.660ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி ஜிம்மு பேரரசினால் ஜப்பான் அமைக்கப்பட்டது.👉 1933ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
வரலாற்றில் (பிப்ரவரி:11) -இன்று - எடிசன் பிறந்த தினம் !
Reviewed by Bright Zoom
on
February 11, 2019
Rating:
No comments: