வீட்டில் காய்கறி தோட்டம் அமைக்கணுமா?

வீட்டில் காய்கறி தோட்டம் அமைக்கணுமா?

காய்கறி தோட்டம் !!

🌿 என்னதான் தேடி தேடி சுத்தமான காய்கறிகளை வாங்கினாலும் நம் வீட்டு தோட்டத்தில் பறித்து உண்பதே தனி சுகம் தான். வீட்டில் இருக்கும் இடத்தை பொறுத்து, சிறியதாக ஒரு தோட்டம் அமைத்துக் கொண்டால் போதும்.

🌿 வீட்டில் கிலோ கணக்கில் காய்கறிகளை வாங்கி வைக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. இரசாயன உரங்களோ, பூச்சி கொல்லிகளோ இல்லாத காய்கறிகளை உண்டு நலமுடன் வாழலாம்.

🌿 தோட்டம் அமைக்க முதலில் கவனிக்க வேண்டியது இடத்தை தான். தனி வீடாக இருக்கும் பட்சத்தில் தரையில் கிடைக்கும் இடத்தை வைத்து தோட்டம் அமைக்கலாம்.

🌿 அதனை சிறு சிறு பாத்திகளாக பிரித்து கீரை, வெண்டை, கத்தரி, தக்காளி மற்றும் வரப்பு ஓரங்களில் சின்ன வெங்காயம், ஒரு கறிவேப்பிலை, ஒரு முருங்கை மரம், ஒரு எலுமிச்சை கண்டிப்பாக இருக்கும்படி அமைத்துக் கொள்ளலாம்.

🌿 தோட்டம் அமைத்தப்பின் உள்ள முக்கியமான பிரச்சனை பூச்சி தாக்குதல் தான். இதனை இயற்கை உரங்களைப் பயன்படுத்தி எளிதாக கட்டுப்படுத்தலாம்.

🌿 மேலும் வீட்டு தோட்டத்தில் சிறிது இடம் இருந்தால் அங்கு வீட்டு சமையலறை கழிவுகளை ஒரு தொட்டியில் இட்டு அடிக்கடி கிளறி விட்டு கொஞ்சம் சாணம் மற்றும் யூரியாவை இட்டு மக்க வைத்தால் இயற்கையான உரம் தயார். 50 நாட்களுக்கு பிறகு அதனை செடிகளுக்கு அளிக்கலாம்.

🌿 சிலருக்கு மொட்டை மாடியில் தான் இடம் இருக்கும். அவர்கள் முதலில் மாடியை ஆராய்ந்து, வெளியில் அதிகமாக படுவதாக இருந்தால், ஷேடு நெட் எனப்படும் வலையை பயன்படுத்தி தோட்டம் அமைக்க வேண்டும்.

🌿 இது எல்லாம் செய்ய முடியாது என்றால், குறைந்தது தார்பாலின் ஷீட்டையாவது மாடியில் விரித்து அதன் மீது தொட்டிகளை வைக்க வேண்டும். மாடித்தோட்டம் அமைப்பவர்கள் தென்னை நார்கழிவை பயன்படுத்தி தொட்டியை தயார் செய்வது நல்லது.

உங்களுக்கு விவசாயத்தில் ஆர்வம் உள்ளதா? நீங்கள் விவசாயம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அதற்கு இதுதான் சிறந்த செயலி... நீங்கள் விவசாயத்தில் வெற்றி பெற👇


இங்கே கிளிக் செய்யுங்கள்..👆👆👆
🌿 தென்னை நார்க்கழிவை பயன்படுத்தும் பொழுது, அவை ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்வதாலும், எடை குறைவாக இருப்பதாலும் மாடிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

🌿 ஒரு சிலருக்கு பால்கனியில் மட்டும் தான் இடம் இருக்கும். அவர்கள் குறைந்தது வீட்டிற்கு தேவையான ஐந்து செடிகளையாவது வளர்க்க வேண்டும்.

🌿 உதாரணமாக தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை போன்ற சமையலுக்கு அடிப்படையாக தேவைப்படும் செடிகளை மட்டுமாவது பால்கனியில் வைத்து வளர்க்கலாம்.

🌿 பால்கனி தரை வீணாகாமல் இருக்க, தார்பாலின் ஷீட் உபயோகிக்கலாம். இல்லையெனில் தொட்டிகளுக்கு அடியில் தட்டுகளை வைத்து அதிகப்படியான தண்ணீர் அதில் வடியுமாறு செய்யலாம்.

🌿 கீரை வகைகளுக்கு அதிகமாக வெயில் தேவைப்படாது. எனவே, பால்கனியில் வெயில் படாது என்றால் தாராளமாக கீரைகளை வளர்க்கலாம்.

🌿 எந்த பகுதியில் தோட்டம் அமைத்தாலும், நம் பகுதிக்கு ஏற்ற, நம்முடைய சீதோஷ்ண நிலையில் வளரக்கூடிய செடிகளையே தேர்வு செய்து விதைக்க வேண்டும்.

🌿 தினசரி அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை தோட்டத்திற்காக செலவழித்தால் போதும். வீட்டிற்கு ஆகும் காய்கறி செலவில் பெருமளவை குறைக்க முடியும்.

🌿 காய்கறி தோட்டம் அமைப்பது மனம், உடல், பணம் என அனைத்திற்கும் பாதுகாப்பானது என்பதை அனுபவ பூர்வமாகத் தான் உணர முடியும்.




வீட்டில் காய்கறி தோட்டம் அமைக்கணுமா? வீட்டில் காய்கறி தோட்டம் அமைக்கணுமா? Reviewed by Bright Zoom on February 11, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.