கண் மை தயாரிக்கும் முறை....

கண் மை தயாரிக்கும் முறை....

 கண்களுக்கு மை அழகு என்பது மட்டுமே நாம் அறிந்த உண்மை, ஆனால் கண் மை ஆரோக்கியம் தருவதிலும் முன்னோடியாக திகழ்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ஆம், கண் மையானது கண்களில் உண்டாகும் சு+ட்டை கட்டுப்படுத்தி குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி கண்களுக்குள் விழும் தூசுகளை எளிதாக வெளியேற்றுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இத்தகைய தன்மை கொண்ட கண் மையை நாமே வீட்டில் இயற்கையான முறையில் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.

தேவையான பொருட்கள்:
மண் விளக்குவிளக்கெண்ணெய் - ஒரு கப் அளவு சந்தனம் - தேவையான அளவு செம்பு அல்லது பித்தளை பாத்திரம் - 1 செய்முறை விளக்கம் :
👉 முதலில் ஒரு செப்புப் பாத்திரத்தை எடுத்து அதன் அடிப்பகுதியைக் நன்றாக கழுவி சுத்தமான துணியால் துடைத்து கொள்ள வேண்டும்.

👉 பின்பு, நன்றாக அரைக்கப்பட்ட சந்தனத்தை பாத்திரத்தின் அடிப்பகுதியில் தடவிக் கொள்ள வேண்டும்.

👉 மூன்று கற்கள் கொண்ட அடுப்பு மீது பாத்திரத்தை வைக்க வேண்டும். அதன் அடிப்புறம் விளக்கெண்ணெய் ஊற்றி எரியவிடப்பட்ட அகல் விளக்கு அல்லது உயரம் குறைவான குத்து விளக்கு வைக்க வேண்டும்.

👉 விளக்கின் சு+டு பாத்திரத்தின் அடியில் பு+சப்பட்ட சந்தனத்தின் மீது படப்பட அங்கே குவியல் குவியலாக மை சேரும். போதிய அளவு மை சேர்ந்த உடன் பாத்திரத்தை இறக்கி பாத்திரத்திலிருக்கும் கரித்தூளை ஈரம்படாத ஒரு காகிதம் அல்லது பீங்கான் மீது உதிர்த்து விடவும். போதிய அளவு மை சேர்ந்ததும் வெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து மை பக்குவத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

👉 நமக்கு தேவையான அளவுகளில் சிறிய மற்றும் பெரிய அளவுள்ள டப்பாவில் அடைத்து விற்பனைக்கு அனுப்பலாம்.


கண் மை தயாரிக்கும் முறை.... கண் மை தயாரிக்கும் முறை.... Reviewed by Bright Zoom on February 12, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.