வால் சேவல் வளர்ப்பு !
சேவல்கள் இறைச்சிக்காகவும், அழகுக்காகவும், சண்டை போன்ற கிராம வாழ்வியல் விளையாட்டுகளுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இந்த வகை சேவல்கள் மற்றும் கோழிகளை இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.
வால் சேவல் :
🐓 சேவல் வளர்ப்பு என்பது மிகச்சிறந்த வருவாய் தரும் தொழிலாக மாறி இருக்கிறது. குறிப்பாக, வால் சேவல்கள் சந்தையில் நல்ல விலை போகின்றன.
🐓 தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நீண்ட நெடுங்காலமாக இருந்து வரும் பறவை இனம் இந்த வால் சேவல் ஆகும்.
🐓 இந்த சேவல்கள் பல்வேறு பருவநிலைகளையும், நோய்களையும் தாங்கி வாழும் திறன் படைத்தவை.
🐓 நாட்டுரக சேவல்களான இவற்றை நோய்கள் எளிதில் தாக்காது என்பதால் இதை வளர்க்க சிரமம் கிடையாது.
🐓 இவை பார்க்க அழகான தோற்றம் கொண்டவையாக இருப்பதால் இவற்றை தற்போது வீடுகளில் அழகுக்காகவும் வளர்க்கிறார்கள். இந்த வகை சேவல்களுக்கு எப்போதும் நல்ல விலை இருந்து வருகிறது.
🐓 இதன் வால் நீளம் மற்றும் நிறத்தை வைத்து இவற்றின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. வால்சேவல்களின் உடல் ஆரோக்கியத்தை பொருத்து இவற்றின் வால்களின் நீளமும், பளபளப்பும் அமையும்.
உணவு :
🐓 இவற்றுக்கு சத்துள்ள தீவனத்தை கொடுத்து வளர்க்க வேண்டும். இந்த ரகம் சேவல் குஞ்சுகளை பெருவதற்கு இதே இனத்தை சேர்ந்த கோழிகளை வளர்த்து அதன் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
🐓 வால் சேவல் இனத்து கோழிகள் 1 கிலோ ரூ. 300 முதல் 350 வரை கிடைக்கின்றன. இவற்றை ரகம் பார்த்து வாங்கி சேவலுடன் இனப்பெருக்கம் செய்ய வேண்டும்.
நேரம் மற்றும் தீவனம் :
🐓 சேவல் மற்றும் கோழி பராமரிக்க நாளொன்றுக்கு சுமார் 3 மணி நேரம் செலவிட வேண்டும். தீவனங்களை ஒரு கோழிக்கு 250 கிராம் அளவு ஒரு நாளைக்கு கொடுக்கலாம். இவற்றுடன் உணவுக்கழிவு, தவிடு, குருணை போன்றவற்றையும் சேர்த்துக் கொடுக்கலாம்.
🐓 காலை 1 மணி நேரம் சேவலுக்கு உணவளிப்பதோடு மாலை 2 மணிநேரம் கோழிகள் இடத்தை சுத்தம் செய்து அடைக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.

Reviewed by Bright Zoom
on
February 13, 2019
Rating:
No comments: