கணினி மற்றும் இணையதளம் இருந்தால் நீங்களும் ஒரு தொழிலதிபர் !

இணையத்தில் உலா வருபவரா நீங்கள்? எதிர்காலத்தை வளமாக்குங்கள்..!!

Bright Zoom kalvi

கணினி மற்றும் இணையதளம் இருந்தால் நீங்களும் ஒரு தொழிலதிபர் !

◆உங்கள் மூளையே முதலீடு..! உங்கள் முதலீட்டை மூலதனமாக்க வேண்டுமா..? அதற்கு பல வழிகள் உண்டு..

 நாம் வாழும் இந்த கணினி யுகத்தில் ஒரு கணினியும் இணையதள வசதியும் இருந்தால் போதும் நாம் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே பல வேலைகளை செய்யலாம். இன்று நாம் பார்க்கவிருக்கும் சுயதொழில் என்னவென்றால் ஆன்லைன் மூலம் மக்களுக்கு என்னென்ன சேவைகள் எல்லாம் வழங்க முடியும், அதை எவ்வாறு வழங்கலாம் என்பதைத்தான் ஒரு முன்னோட்டமாக பார்க்கவிருக்கிறோம்.

◆இன்று அரசாங்க வேலையின் மீது மக்களுக்கு உள்ள ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. அதற்கேற்றாற்போல் மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு வேலைவாய்ப்புகளை தொடர்ந்து அறிவித்துக் கொண்டு தான் இருக்கின்றன. அரசாங்க வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையுள்ள பலருக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது தெரிவதில்லை. இதை நாம் தொழிலாக செய்யும் போது நல்ல வருமானம் ஈட்ட முடியும்.

◆அன்றாட வாழ்வில் மனிதனுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் ஆன்லைன் மூலம் பெறும் வசதியை அரசாங்கம் அளித்து வருகிறது. உதாரணமாக பட்டா, சிட்டா அடங்கல், இருப்பிட சான்றிதழ், வருமானவரி சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் என சொல்லிக்கொண்டே போகலாம். இந்த சான்றிதழ்கள் தேவைப்படும் மக்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொடுப்பதன் மூலம் நல்ல வருமானம் பார்க்கலாம்.

◆தனிநபருக்கான அனைத்து அடையாள சான்றிதழ்களையும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொடுக்க முடியும். அவை என்னவென்றால் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, பாஸ்போர்ட், ரேசன் ஸ்மார்ட் அட்டை என அத்தனை வசதிகளும் இன்று ஆன்லைனில் உள்ளன, இதை தேவையானவர்களுக்கு விண்ணப்பித்து அதன் மூலமும் வருமானம் காண முடியும்.

◆இன்று மொபைலின் தாக்கம் அனைத்து மக்களிடமும் சென்றடைந்துள்ளதால் மொபைல் ரீசார்ஜ், டி.டி.எச் ரீசார்ஜ், மின்சார கட்டணம், வீட்டு வரி மற்றும் கேஸ் கட்டணம் ஆகியவைகளை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதிகளை செய்து கொடுத்தால் உங்களுக்கு நிரந்தரமான வாடிக்கையாளர்கள் கிடைக்க நிறையவே வாய்ப்புள்ளது. மேலும் இரயில் மற்றும் பேருந்திற்கான பயணச்சீட்டை ஆன்லைன் மூலம் பதிவு செய்தும் கொடுக்கலாம்.

◆இன்னும் ஏராளமான வசதிகள் இந்த இணையதளத்தில் உள்ளன. சொல்லபோனால் இணையதளம் என்பது நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். இதனை சரியான முறையில் பயன்படுத்தினால் வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி..!






கணினி மற்றும் இணையதளம் இருந்தால் நீங்களும் ஒரு தொழிலதிபர் ! கணினி மற்றும் இணையதளம் இருந்தால் நீங்களும் ஒரு தொழிலதிபர் ! Reviewed by Bright Zoom on February 19, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.