இயற்கை எழில் கொஞ்சும்
மேகமலை !!
🌄 பசுமைப் போர்த்திய மலைகளும், வெண் பஞ்சு மேகங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு ஒன்றையொன்று தழுவிக் கொள்கிற அட்டகாசமான இடம் மேகமலை.
🌄 இது தேனி மாவட்டம் சின்னமனசின்னமனூர் நகரில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் உள்ளது. வேகமான காற்று வீசும் மலைகள் என்றும் அழைக்கப்படுகிறது.
மேகமலையின் சிறப்புகள் :
🌄 மேகமலை நான்கைந்து மலைச்சிகரங்களால் சு+ழப்பட்ட நடுவே உள்ள பள்ளத்தாக்கு ஆகும். தமிழகத்தில் உள்ள மலைவாச தலங்களில் சிறந்த நில அமைப்பு கொண்டதாக இருக்கிறது.
🌄 மலை முழுவதும் மேகங்களால் சு+ழப்பட்டு ஆட்சி செய்வதால் மேகமலை என்று பெயர். மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி பச்சைப் பசேல் என திரும்பிய பக்கமெல்லாம் பசுமை போர்வை உடுத்தியது போல் பரந்து விரிந்து கிடக்கும் மேகங்களின் தாய்வீடு தான் இந்த மேகமலை.
🌄 பசுமையான நிலப்பரப்புடன் பெரிய பெரிய மரங்களுடன் மிக அடர்த்தியாக காணப்படுகிறது.
🌄 மிக அழகான சாய்ந்த நிலப்பரப்பில் உள்ள பார்வையைப் பறித்துப் போகிற பச்சைத் தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்கள்.
🌄 உயர்ந்த மலைகளின் அழகு, மிக ஆழமான பள்ளம், அழகிய ஏரி என பல இயற்கை வளம் கொட்டிக் கிடக்கின்றன. இவை அனைத்தும் மனிதனின் காலடிப் பட்டு சிதைந்து போகாத பசுமை மாறாக் காடுகளாகவே உள்ளன.
எப்படி செல்ல வேண்டும்?
🚖 சின்னமனூரிலிருந்து மலைப்பாதை வழியாகத்தான் செல்ல முடியும். மலைப்பாதையின் முதல் 30 கி.மீ. வனப்பகுதி. அடுத்த 20 கி.மீ. அடர்ந்த தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும். சொந்த வாகனத்தில் சென்றால் சிறந்த அனுபவங்கள் செல்லும் வழியில் கிடைக்கும்.
🌄 செயற்கைத் தனங்கள் நுழையாத இயற்கையை விரும்புகின்ற ஒவ்வொருவரும் கட்டாயம் சென்று ரசிக்கக்கூடிய மிக அற்புதமான பொக்கிஷம் மேகமலை. இதை ஓர் ஆரோக்கிய பயணம் என்று கூட சொல்லலாம்.

இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை !!
Reviewed by Bright Zoom
on
February 13, 2019
Rating:
No comments: