கியூபாவின் மாவீரன் சேகுவாரா..1




கியூபாவின் மாவீரன் சேகுவாரா

சேகுவாரா !!

💠உலகம் முழுக்க சில பரிச்சயமான உருவ அமைப்புகள் பல பிரபலமாகும் அது ஏன்? எதற்கு? எப்படி? என்று நம்மால் வரையறுக்க முடியாது.

💠அப்படியான ஒரு உருவம்தான் முக சவரம் செய்யப்படாமல் சிலுப்பிய தலையோடு சிகார் சகிதமாக கம்பீரமான ஆளுமையாக டி-சர்டில் இருந்து அமெரிக்காவின் ஹவாய் செருப்பு வரை ஒரு உருவம் பிரபலம் என்றால் அது சேகுவாரா தான்.

💠கியூபா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாவீரன். சேகுவாரா புரியாதவர்களுக்கு புதிர். புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்.

சேகுவாரா யார்?

💠 ஏழைகளை அன்போடு அரவணைப்பவர்.

💠 ஒரு சோசலிசப் புரட்சியாளர் மருத்துவர்  அரசியல்வாதி.

💠 மேலும் கியூபா மற்றும் பல நாடுகளின் புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப் பல முகங்களைக் கொண்டவர்.

💠 சேகுவாரா என்றால் விடுதலை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரல் என்பதாகும்.

💠 சேகுவாரா என்கிற இந்த பெயர் உலக வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் சொல்லில் அடங்காதது. இந்த தேசத்தின் பிள்ளை என ஒரு தேசத்திற்குள் குறுக்கிவிட முடியாத வாழ்க்கை வாழ்ந்த போராளி ஆவார்.

💠 வெனிசுலா கொலம்பியா பிரேசில் கியூபா பொலிவியா காங்கோ எனப் பல இடங்களில் கொரில்லா போர் முறைகளின் பின்னே சேகுவாரா நின்று இருந்தார்.

💠 அடிப்படையில் மருத்துவரான இவர் ஆஸ்துமா நோயாளியாகவும் இருந்தார். ஆனால் மருத்துவம் பார்த்து நோய்களை தீர்ப்பதை விட சமூகத்தின் அழுக்குகளை தீர்க்க வேண்டும் என்கிற உறுதி அவரிடம் இருந்தது.

💠 அதற்கு முக்கியமான காரணம் தன் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்கா முழுக்க சுற்றியதுதான். அதோடு கார்ல் மார்க்சையும்  லெனினையும் உள்வாங்கி படித்த அவர் ஏழைகளும் பாட்டாளிகளும் படும் துன்பங்களை அறிந்தபோதுதான் போராளியானார்.

சேகுவாராவின் இளமைப்பருவம்..!!

💠 சேகுவாரா 1928ஆம் ஆண்டுஇ ஜூன் மாதம் 14ஆம் தேதி அர்ஜென்டீனாவில் பிறந்தார். ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ் மற்றும் சிலியா டெ ல செர்னா தம்பதியர்களுக்கு ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவராக பிறந்தார்.


💠 அளவற்ற மகிழ்ச்சிக்கு அடையாளமாக தங்களது பெயர்களின் பாதியை இணைத்து "ஏர்னெஸ்டோ குவேரா டி ல செர்னா" என பெயர் சூட்டினர்.

💠 அப்போது குவேரா தம்பதிக்கு தெரிந்திருக்கவில்லை தனது மகனுக்கு வரலாற்றில் வேறு பெயர் பதிவு செய்யப்படும் என்பது. சேவிற்கு குறையற்ற விதத்தில் குழந்தை பருவம் அமைந்தது. சொந்தமாக மூலிகை தேயிலை பண்ணையிருக்குமளவு வளமானது ஏர்னெஸ்டோவின் குடும்பம்.

💠 இவர் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்கு கிடைத்தது. இவரது தந்தைஇ சோசலிசத்தில் ஆதரவாளராக இருந்தார். இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.

ஆஸ்துமா நோய் :

💠 'சே"வுக்கு இரண்டு வயது இருக்கும். நீச்சல் ஈடுபாடு கொண்ட அவரது தாய்இ ஒரு குளிர் காலைப்பொழுதில் நதிக்கு தன் குழந்தையை அழைத்துச் சென்றார். நடுக்கமூட்டும் குளிர் நதியில் தன் குழந்தையை அவர் நீராட வைக்கஇ ஈர உடையில் கிடுகிடுத்துக்கிடந்த குழந்தையின் நுரையீரலை நிமோனியா நோய் தாக்கிஇ ஆஸ்துமா இவரை இறுகப்பற்றியது. வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்துமா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார்.


💠 இவர் ஒரு சிறந்த 'ரக்பி" விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை 'பூசெர்" என்னும் பட்டப்பெயர் இட்டு அழைத்தனர்.

💠 தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேராஇ 12வது வயதில் உள்ள+ர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடாஇ கீட்ஸ்இ மாச்சாடோஇ லோர்க்காஇ மிஸ்ட்ரல்இ வலேஜோஇ வைட்மன் ஆகியோரது ஆக்கங்களின் மீது இவருக்கு சிறந்த ஆர்வம் இருந்தது.

💠 குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. இவற்றுள் மார்க்ஸ்இ போல்க்னர்இ கைடேஇ சல்காரிஇ வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்கு சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேருஇ காப்காஇ காமுஸ்இ லெனின் போன்றவர்களது நூல்களையும்இ பிரான்ஸ்இ ஏங்கெல்ஸ்இ வெல்ஸ்இ புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் இவர் விரும்பி வாசித்தார். வசிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் எழுத்தாளராக வேண்டும் என்ற கனவு இவரிடம் சுழன்றுகொண்டு இருந்ததால்இ தன்னை சுற்றியுள்ள அனைத்தையும் தொகுப்பாக்கிஇ பின் பகுத்து பார்க்கும் தன்மையும் இவரிடம் இருந்தது.

சேகுவாராவின் மருத்துவ படிப்பு!!

💠 சேகுவாராஇ 1948ஆம் ஆண்டு மருத்துவம் படிப்பதற்காக புவனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆனால்இ 1951ஆம் ஆண்டு படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டுஇ அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்துஇ மோட்டார் ஈருருளியில் தென் அமெரிக்கா முழுதும் பயணம் செய்தார்.

💠 அப்போது தென் அமெரிக்கா முழுக்கத் தொழுநோய் பீடித்திருந்த காலம். அது குறித்து ஆய்வு செய்யவும்இ அதற்கு தங்களால் ஏதாவது மருந்து கண்டுபிடிக்க முடியுமா? என்ற தேடலுமே அந்த பயணத்திற்கான ஆரம்பமாக இருந்தது.

💠 பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வதுதான் இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது.

💠 தொழுநோயாளிகளின் தங்குமிடங்களை தேடித் தேடிச்சென்றுஇ அவர்களின் தோளில் கைப்போட்டு சாப்பிட்டுஇ உறங்கிஇ கால் பந்தாடிய 'சே"வின் உள்ளத்தில் பலவிதமான போராட்டங்களை ஏற்படுத்தியது. தொழு நோயாளர்களிடம் அவர் காட்டிய பரிவு மற்ற மனிதர்களிடம் இருந்து அவரை பிரித்துக் காட்டியது.


💠 இப்பயணத்தின்போது அவர் எடுத்த குறிப்புகளை பயன்படுத்தி 'மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்" (வுhந ஆழவழசஉலஉடந னுயைசநைள) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூயார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாக தேர்வு செய்யப்பட்டது. பின்னர்இ 2004ல்இ இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.

💠 சேகுவாராவின் வாழ்வை முழுவதுமாக புரட்டிப்போட்ட பயணம் இது. இதுவரை இவரின் மேல் புரட்சியின் எந்த சிறுநிழலும் விழுந்திருக்கவில்லை. புத்தக வாசிப்புஇ நண்பர்கள்இ விளையாட்டு என இவரது உலகம் உல்லாசமாக இருந்தது. ஆனால்இ இந்த பயணம் அவருக்கு பல படிப்பினைகளை கற்றுத்தந்தது.

💠 தென் அமெரிக்க கண்டம் முழுவதும் மக்களின் ஏழ்மைஇ பிணிஇ அறியாமைஇ அடக்குமுறைஇ வாக்குரிமை பறிப்புஇ வர்க்க வேறுபாடுகளுக்கு காரணமாக அமெரிக்காவும் அவர்களது சி.ஐ.ஏ. உளவு நிறுவனமும் செயல்படுவதை அறிந்தார்.

சேகுவாராவின் பயணங்கள்..!!


💠 லத்தீன் அமெரிக்க நாடுகளில் சமூகஇ பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அனைத்திற்கும் வாஷிங்டனும்இ அதன் முதலாளித்துவமும் மட்டுமே காரணமாக இருப்பதை கண்டறிந்தார்.

💠 இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக மார்க்சியம் (ஆயசஒளைஅ) அவர் சிந்தனையில் தோன்றியது. மார்க்சியம் என்பது கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகிய மெய்யியலாளர்களின் ஆய்வுகள்இ எழுத்துக்கள் போன்றவற்றின் மூலம் வெளிப்படுத்தப்படும் உலகப்பார்வை ஆகும்.

💠 இறுதியாக 1952ஆம் ஆண்டுஇ ஜூலை மாதம் இந்த பயணம் முடிவுக்கு வந்தபோதுஇ 'சே" முழுவதுமாக மாறியிருந்தார். இலத்தீன் அமெரிக்காவை தனித்தனி நாடுகளாக பார்க்காமல்இ ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார்.

💠 அதன்பின் அர்ஜென்டீனாவுக்கு திரும்பிய சேகுவாரா தனது படிப்பை முடித்து 1953ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளமோ பட்டம் பெற்றார்.

💠 தனது மருத்துவப் படிப்பை முடித்த சேகுவாரா 1953ஆம் ஆண்டு ஜூலையில் மீண்டும் பயணமொன்றை தொடங்கினார். இம்முறை பொலீவியாஇ பெருஇ ஈக்குவடோர்இ பனாமாஇ காஸ்ட்டா ரிக்காஇ நிக்கராகுவாஇ ஹொண்டூராஸ்இ எல் சல்வடோர் ஆகிய நாடுகளுக்கு சென்றார்.

💠 அதே ஆண்டு டிசம்பரில் சேகுவாரா குவாதமாலாவுக்கு சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட குடியரசுத் தலைவர்இ நிலச் சீர்திருத்தங்களின் மூலமும்இ பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார்.

💠 உண்மையான புரட்சியாளனாக ஆவதற்கு தேவையான அனுபவங்களை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் சேகுவாராஇ குவாதமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார். ஏற்கெனவே அவருக்குள் உருவாகியிருந்த அமெரிக்கா மீதான கோபத்தை குவாதமாலாவின் அரசியலை சூழல் அதிகப்படுத்தியது.

💠 குவாதமாலா நகரில்இ ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் நட்பு இவருக்கு கிடைத்தது. பிற்காலத்தில் இவரையே சே திருமணம் செய்து கொண்டார்.

ஹில்டா கடேயா அக்கொஸ்தா :

💠 ஹில்டா கடேயா அக்கொஸ்தாஇ பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளர் ஆவார். மேலும்இ இவர் இடதுசாரி சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் இவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன.

💠 இவர் பல உயரதிகாரிகளை சேகுவாராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளை கொண்டிருந்தவர்களும்இ கியூபாவை விட்டு வெளியேறி வாழ்ந்து வந்தவர்களின் தொடர்புகளும் சேகுவாராவுக்கு கிடைத்தது. அச்சமயத்தில்தான் 'சே" என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது.

சே :

💠 'சே" என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட அர்ஜென்டீன சொல்லாகும். சே என்பது வியப்புச்சொல் ஆகும்.

💠 ஆனால்இ தென் அமெரிக்க பாம்பாஸ் புல்வெளியினருக்கு வியப்புஇ மகிழ்ச்சிஇ வருத்தம்இ நாணயம்இ அங்கீகாரம் என பல மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் சொல்லாக இது அமைகிறது. இச்சொல்லின் மீதுள்ள பற்றால்இ கியூபா புரட்சியாளர்கள்இ 'சே" என்று செல்லமாக அழைத்தனர்.

💠 'சே"இ அங்கிருந்த கம்யூனிஸ்ட்களுடன் தன்னை இணைத்துக்கொண்டுஇ அமெரிக்காவுக்கு எதிரான வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார். ஆனால்இ அமெரிக்கா தனது எண்ணத்தை சுலபமாக நிறைவேற்றி அந்நாட்டின் அரசை கவிழ்த்தது.

💠 1954ஆம் ஆண்டு குவாதமாலாவை முற்றுகையிடும்போது தப்பியோடும் நிலை ஏற்பட்டு மெக்ஸிகோவில் தஞ்சம் புகுந்தார் சே. அங்கு நாடு கடத்தப்பட்ட கியூபா மக்களை சந்தித்தார். இக்காலகட்டங்களில் கம்யூனிஸ்ட்களிடம் நெருங்கிப் பழகிய 'சே"இ மார்க்ஸிய லெனினிய பாதைதான் தனது பாதை என்பதை உணர்ந்தார். அது குறித்த ஆய்வுகளையும் அவர் மேற்கொண்டார்.

மனிதருள் மாமனிதர்... சேகுவாரா..!!

💠 விவசாயிகளிடம் குவாதமாலா அரசுஇ ஆயுதங்களைக் கொடுத்துப் போராட்டத்தில் ஈடுபடச் செய்திருந்தால் அமெரிக்காவின் தாக்குதலை முறியடித்திருக்கலாம் எனும் பார்வையில்இ 'சே" கட்டுரைகள் எழுதினார். இதனால் சி.ஐ.ஏவின் பார்வைக்கு இலக்கானார். எனவேஇ சே தன் பாதுகாப்பிற்காக அர்ஜென்டினா தூதரகத்தில் தங்க நேரிட்டது.

💠 இச்சமயத்தில்இ இவரது எண்ணங்களால் ஒரு கியூபா போராளி வசீகரிக்கப்பட்டார். அவர் பெயர் நிக்கோலோபஸ். கியூபாவின் ஜனாதிபதியின் ஆட்சிக்கு எதிராக ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமையில் ஒரு புரட்சி ஏற்படுத்திய 'ஜூலை 26" எனும் இயக்கம் அப்போதுதான் தோல்வியை சந்தித்திருந்தது.


💠 நிக்கோலோபஸ்க்குஇ குவாதமாலாவில் 'சே"வை சந்தித்தபோது புத்துணர்ச்சி ஏற்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க சில யோசனைகள் இவரது எண்ணத்தில் பளிச்சிட்டன. சித்தாந்தங்களில் தேர்ச்சி பெற்றிருந்த சேகுவாரா மட்டும் கியூபா புரட்சியில் பங்கெடுத்தால்இ போராட்டத்திற்கு ஒரு புதுவடிவம் கிடைக்கும் என்று நிக்கோலோபஸ் நம்பினார். இது குறித்து காஸ்ட்ரோவின் சகோதரர் ரால் காஸ்ட்ரோவுடன் பேசினார்.

💠 இரண்டு மகத்தான சக்திகள் இணைந்த அந்த தருணம் கியூபா வளர்ச்சியின் அஸ்திவாரமாகும். அப்போது 'சே"வுக்கு வயது 27. பிடல் காஸ்ட்ரோவுக்கு 32. பிடல் காஸ்ட்ரோவுக்கு கியூபா தன் சொந்த நாடு. போராடிய வேண்டிய அவசியம் இயல்பானது.


💠 ஆனால் 'சே"வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் தொடர்பற்ற மற்றொரு தேசத்தில்இ அம்மக்களின் விடுதலைக்காக தன் உயிரைப் பணயம் வைத்து ஆயுதம் எடுப்பதென்பதுஇ உலக வரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந்திராத ஒன்று. இதனால்தான் 'சே" மனிதருள் மாமனிதராக அடையாளம் காணப்பட்டார்.

💠 அதன்பின் புரட்சிக்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. ஏறக்குறைய ஒன்றரை வருட கடுமையான ஆயுதப் பயிற்சிக்குப் பிறகு 1956இ நவம்பர் 26ம் தேதி இரவு மெக்ஸிகோ கடற்கரையில்இ 82 போராளிகள் ஒருவர் பின் ஒருவராக படகில் ஏறிக்கொண்டபின்இ விடுதலையின் பாடலை முழங்கியபடிஇ கிரான்மா எனும் படகு கியூபாவை நோக்கிப் பயணித்தது.

💠 காலநிலையில் ஏற்பட்ட சிக்கலால் படகு எதிர்பார்த்த இடத்தை எதிர்பார்த்த நேரத்தில் அடைய முடியாமல் போகின்றது. இதனால் இராணுவம் சுதாரித்துக் கொள்கின்றது. இச்சூழ்நிலையில் தன் சகாக்கள் பலரை இழந்தார்கள். மிஞ்சியவர்களின் துணையோடு இராணுவத்திற்கு ஆயுதங்கள் வரும் இரயில் கவிழ்க்கப்படுகின்றது. இராணுவத்தினர் சிறைப்பிடிக்கபடுகின்றனர்.

💠 1957ஆம் ஆண்டுஇ ஜனவரி 17ம் தேதிஇ தளபதி லா பிளாட்டோ கொல்லப்பட்டதன் மூலம் புரட்சியாளர்களின் முதல் வெற்றிச் சங்கொலி கியூபாவில் எதிரொலித்தது. அன்று துவங்கி மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக நடந்தது கொரில்லா யுத்தம்.

💠 துவக்கத்தில் குழுவில் மருத்துவராகவும்இ லெஃப்டினென்ட்டாகவும் இடம்பெற்ற 'சே"இ தன் திறமைஇ துணிச்சல்இ மதிநுட்பம் ஆகியவற்றால் காஸ்ட்ரோவுக்கு அடுத்த நிலையிலிருந்து படைகளை வழி நடத்தினார். கொரில்லா படைக்கு கமாண்டராக அறிவிக்கப்பட்ட 'சே" கடுமையான ஆஸ்துமா துன்புறுத்திய போதிலும்இ அடர்வனங்களிலும் மலைகளிலும் சளைக்காமல் வீரர்களுக்கு தெம்பூட்டியபடி படையை வழி நடத்தினார்.

💠 'சாவைப் பற்றி எனக்கு கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்" போன்ற இவரது வாசகங்கள்இ களத்தில் வீரர்களுக்கு தெம்பூட்டி சீற்றம் கொள்ளவைத்தன.


💠 யுவேராவில் நடைபெற்ற யுத்தத்தில்இ 53 ராணுவத்தினரை வெறும் 18 கொரில்லாக்களை கொண்டு வீழ்த்தியதுதான் 'சே"வின் வீரத்தை கியூபாவுக்கு வெளிச்சமிட்டது. 1958ஆம் ஆண்டு ஸாண்டா கிளாராவைக் கைப்பற்றினார். கொடுங்கோலன் பாட்டிஸ்ட்டா ஸாண்டா டொமிங்கோவிற்கு தப்பியோடினான்.

💠 1958ஆம் ஆண்டில்இ புரட்சிப்படை தலைநகர் ஹவானாவுக்குள் ஊடுருவியது. கியூபா முழுவதும் காஸ்ட்ரோவின் வசமானது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கொரில்லா யுத்த வெற்றிஇ உலகின் அனைத்து நாடுகளையும் வியப்பில் ஆழ்த்தியது.

💠 1959ஆம் ஆண்டு கியூபாவின் பிரதமராக காஸ்ட்ரோ பதவியேற்றவுடன் சேகுவேராவை ஒரு கியூபன் என்று அறிவித்த பிறகு அந்த வருடம் அக்டோபர் மாதம் தேசிய வங்கியின் அதிபராக நியமிக்கப்பட்டார். மேலும்இ விவசாயத்துறையில் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார் 'சே".

💠 தேசிய வங்கியின் தலைவராக கியூபா ரூபாய் நோட்டுகளில் 'சே" என கையெழுத்திடும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார். பின் 1961ஆம் ஆண்டு தேசிய வங்கியின் பதவியை துறந்து தொழிற்துறை அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். இருந்தாலும் 'சே" தன்னை ஒரு சாதாரணக் குடிமகனாகவே அடையாளம் காட்டிக் கொண்டார்.

💠 விவசாயக் கூலிகளுடன் சேர்ந்து கரும்பு வெட்டுவதும்இ தொழிற்சாலைகளில் இதர பணியாளர்களுடன் சேர்ந்து மூட்டை சுமப்பதுமாகவே வாழ்ந்தார். 'சே" மற்றும் காஸ்ட்ரோ இருவருக்குமிடையே யுத்தத்திற்கு முன்பும்இ பின்புமான உறவுகளில் வேறுபாடுகள் இருந்தது என்றாலும்இ ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்ததில்லை.

💠 அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதியாகஇ ஒற்றை மனிதனாகத் தன்னால் வேரறுக்க முடியும் என 'சே" திடமாக நம்பினார். கியூபாவுக்கு ஏவுகணைகள் இறக்குமதி செய்ய ரஷ்யா வாக்குறுதி தந்தபோதுஇ 'ரஷ்ய ஏவுகணைகள் கியூபாவில் இறங்கினால் அது முதலில் அமெரிக்க நகரங்களையே குறிவைக்கும்" எனத் தைரியமாகக் குரல் கொடுத்தார். அமெரிக்காஇ கியூபாவின் மீது விதித்த பொருளாதாரத் தடைதான் அவரது இந்தக் கட்டற்ற கோபத்திற்குக் காரணம்.

💠 அமெரிக்காவின் சி.பி.என். தொலைக்காட்சிஇ ஒரு நேர்காணலுக்காக சேகுவேராவை நியூயார்க்-க்கு அழைத்தது. 'அமெரிக்கா ஒரு கழுதைப் புலி. அதன் ஏகாதிபத்தியத்தை நான் வேரறுப்பேன்" என அமெரிக்க மண்ணிலேயே துணிச்சலாகப் பேட்டி தந்தார் 'சே". சென்ற இடங்களிலெல்லாம் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

💠 இந்நிலையில் காங்கோவின் அரசியல் சூழல்இ அவரை மிகவும் பாதித்தது. மக்கள் புரட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. மூன்று மாத கியூபா அரசால் அங்கீகரிக்கப்படாத பயணத்திற்கு பிறகுஇ 'சே" 1965 மார்ச் மாதத்தில் கியூபா திரும்பினார். விமான நிலையத்தில் அவரை ஃபிடல் காஸ்ட்ரோ கை குலுக்கி வரவேற்றார். அதுதான் வெளியுலகுக்கு 'சே" நேரடியாக வெளிப்பட்ட கடைசி நிகழ்வு.


💠 அதன்பின்னர்இ கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965ஆம் ஆண்டில் தனது நண்பர் காஸ்ட்ரோவுக்கு கண்ணீர் மல்க கடிதம் எழுதிவிட்டு கியூபாவில் இருந்து திடீரெனத் தலைமறைவானார்.

தொடரும்...




கியூபாவின் மாவீரன் சேகுவாரா..1  கியூபாவின் மாவீரன் சேகுவாரா..1 Reviewed by Bright Zoom on March 18, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.