தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வில் தமிழ்மொழியில் படித்தவர்களுக்கு 20 % முன்னுரிமை


தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வில்

8,826 காலிப்பணிடங்கள் தமிழக காவல் துறையில் உள்ளது!!

தமிழ்மொழியில் படித்தவர்களுக்கு 20 % முன்னுரிமை!! உடனே விண்ணப்பியுங்கள்!!

பத்தாம் வகுப்பு கல்வியினை தமிழ் பயிற்றுமொழியில் பயின்றவர்களுக்கான முன்னுரிமை விவரங்கள்:

💥 பத்தாம் வகுப்பு கல்வியினை தமிழ் பயிற்றுமொழியில் (Medium of instruction) பயின்றவர்களுக்கு இறுதித் தெரிவின் போது அதாவது தற்காலிகத் தெரிவுப் பட்டியல் தயாரிக்கும் பொழுது மட்டும் 20% முன்னுரிமை அளிக்கப்படும்.

💥 விண்ணப்பதாரரின் 10ம் வகுப்பு பள்ளி மாற்றுச்சான்று பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் பயிற்று மொழி தமிழ் என்று இருக்க வேண்டும் .

💥 அவ்வாறு இல்லாதிருத்தல் விண்ணப்பதாரர் 10-ம் வகுப்பு பயின்ற கல்வி நிலையத்திலிருந்து தமிழ் பயிற்று மொழியில் படித்துள்ளார் என்பதற்கான சான்றிதழைப் பெற்று இணையவழி விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கவேண்டும்.

💥 விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியினை தனித்தேர்வர் வழியில் பயின்று தேர்ச்சி பெற்றிருந்தால் அவர் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழை மாநில பள்ளித் தேர்வுகள் குழுமம் (இடைநிலை), அரசு தேர்வுகள் துறை, தமிழ்நாடு, சென்னை - 6
அலுவலகத்திலிருந்து பெற்று பதிவேற்றம் செய்திடல் வேண்டும், இவ்வாறு உரிய சான்றிதழ் பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்கள் இவ்வொதுக்கீட்டின் கீழ் பரிசீலிக்கப்படமாட்டார்கள்.

💥 இத்தேர்வுக்குரிய கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்பதால் விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பில் தமிழ்வழி பயிற்றுமொழியில் பயின்றுள்ளார் என்பதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்திருந்தால் மட்டுமே 20 % முன்னுரிமையில் பரிசீலினை செய்யப்படுவார்.

💥 இவ்வாறு உரிய சான்றிதழை பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்கள் இறுதித் தெரிவின் போது  20% முன்னுரிமை அடிப்படையின் கீழ் பரிசீலிக்கப்படமாட்டார்கள்.

💥 விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பில் தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழ் இணைக்காமல் மேல்நிலை வகுப்பின்(HSC) அல்லது பட்டப் படிப்பினை (Degree) தமிழ்வழியில் கற்றதற்கான சான்றிதழைச் சமர்ப்பித்தால் அச்சான்றிதழ் 20மூ முன்னுரிமை அடிப்படையின் கீழ் பரிசீலினைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.





தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வில் தமிழ்மொழியில் படித்தவர்களுக்கு 20 % முன்னுரிமை   தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வில்  தமிழ்மொழியில் படித்தவர்களுக்கு 20 % முன்னுரிமை Reviewed by Bright Zoom on March 24, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.