உலக வரலாற்றில் இன்று ...!
மார்ச் 24,முக்கிய நிகழ்வுகள்,
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்.
உலக காசநோய் தினம் !
முத்துசுவாமி தீட்சிதர்...!
சர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய உண்மை மற்றும் பாதிக்கப்பட்டோர் கண்ணியம் சார்ந்த தினம் ....

👪 பேராயர் ஆஸ்கார் அருனள்போ ரோமிரோ (Archbishop Oscar Arnulfo Remero) அவர்கள் எல்சல்வடோரில் மனித உரிமை மீறல் மற்றும் வன்முறையை எதிர்த்து 1980ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி போராடினார்.
👪 இதனை கருத்தில்கொண்டு மனித உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களையும், வன்முறையால் உயிரிழந்தவர்களையும் நினைவுக்கூற இத்தினத்தை ஐ.நா.சபை 2010ஆம் ஆண்டில் அறிவித்தது.
உலக காசநோய் தினம்...!

💊 காசநோய் ஒரு தொற்றுநோய் என்பதை ராபர்டு கோச் என்பவர் 1882ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி கண்டுபிடித்தார். இது ஒரு உயிர்க்கொல்லி நோய். ஆரம்பத்திலேயே இந்நோயை கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்திவிடலாம்.
💊 காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 1996ஆம் ஆண்டுமுதல் உலக காசநோய் தினம் மார்ச் 24ஆம் தேதி உலக சுகாதார அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.
முத்துசுவாமி தீட்சிதர்...!

🎶 இசை மும்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றப்படும் முத்துசுவாமி தீட்சிதர் 1775ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி திருவாரூரில் பிறந்தார்.
🎶 சிறுவயதிலேயே வேதம், சாஸ்திரம், தர்க்கம், வியாகரணம் (இலக்கணம்), காவியம் ஆகிய அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். திருவாரூர் கோவிலில் உள்ள அனைத்து கடவுள்கள் மீதும் பாடல் இயற்றியுள்ளார்.
🎶 இவர் முருகனையே தன் குருவாக நினைத்தார். இவரது பாடல்களில் குருகு என்ற வார்த்தை இல்லாமல் இருக்காது. தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதத்தில் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.
🎶 பஞ்ச பூதங்கள், தெய்வங்கள், நவகிரகங்கள், புண்ணிய தீர்த்தங்கள், மொழிகள், மாயை குறித்து பாடல்கள் இயற்றியுள்ளார். நவாவர்ணக் கீர்த்தனைகள், பஞ்சலிங்க ஸ்தல கிருதிகள், கமலாம்பா நவாவர்ணம், அபயாம்பா நவாவர்ணம் உள்ளிட்ட பல கீர்த்தனைத் தொகுப்புகளை இயற்றியுள்ளார்.
🎶 இவர் 72 மேளகர்த்தா ராகங்களிலும் கீர்த்தனை இயற்றியுள்ளார். வறட்சி நிலவிய கிராமத்தில் அமிர்தவர்ஷினி ராகத்தில் கீர்த்தனை பாடி மழையை வரவழைத்தார் என்று கூறப்படுகிறது. இதனால் அமிர்தவர்ஷினி ராகத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார்.
🎶 அரிதான, அதிகம் பயன்படுத்தப்படாத ராகங்களிலும்கூட கீர்த்தனைகள் பாடிய முத்துசுவாமி தீட்சிதர் தனது 60வது வயதில் (1835) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
🎵 1988ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி கர்நாடக இசைப்பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் மறைந்தார்.
🎼 1922ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி தமிழ் திரைப்பட பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் மதுரையில் பிறந்தார்.
உலக வரலாற்றில் இன்று ...! மார்ச் 24,முக்கிய நிகழ்வுகள்,
Reviewed by Bright Zoom
on
March 24, 2019
Rating:
No comments: