தேர்வு டிப்ஸ்... அதிக மதிப்பெண் எடுக்க வேண்டுமா?
அதிக மதிப்பெண் எப்படி பெறலாம்?
பள்ளிப்பருவம் முதல் கல்லூரி வரை, மாணவர்களுக்கு மனதில் எழும் கேள்வி, எப்படி படிப்பது? எப்படி அதிக மதிப்பெண் எடுப்பது? என்பது தான்.
சில மாணவர்கள் கஷ்டப்பட்டு அதிக நேரம் படிப்பார்கள், அதிக மதிப்பெண்ணும் பெறுவார்கள்.
சிலர் சுமாராக படித்தாலும், தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து விடுவார்கள். சிலர் என்னதான் கஷ்டப்பட்டு படித்தாலும், அதிக மதிப்பெண் பெற மாட்டார்கள். இதற்கு என்ன காரணம்?
ஒவ்வொருவரும் வௌ;வேறு முறைகளில், தேர்வுக்கு தயாராகின்றனர். எப்படி படிக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொண்டால் அதிக மதிப்பெண்கள் பெற்றுவிடலாம்.
திட்டமிடுதல் :
நீங்கள் தேர்வை பார்த்து பயப்படவோ, வெறுக்கவோ கூடாது. என்னால் நல்ல மதிப்பெண் பெற முடியும் என நீங்கள் உங்களை நம்பினால், கண்டிப்பாக அந்த எண்ணமே உங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமையும்.
ஒவ்வொரு பாடத்திற்கும் எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை முன்பே அட்டவணைப்படுத்த வேண்டும். கஷ்டமான பாடத்திற்கு அதிக நேரமும், எளிதான பாடத்திற்கு குறைந்த நேரமும் ஒதுக்க வேண்டும்.
நீங்கள் படிக்கும் இடத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். அமைதியான இடமாக இருக்க வேண்டும். ஒரு பாடத்தை படித்து கொண்டிருக்கும்போது, மற்ற புத்தகங்கள் உங்கள் பார்வையில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் கவனம் சிதறாமல் ஒரே பாடத்தை படிக்க முடியும்.
படிக்கும்போது கவனிக்க வேண்டியவை :
அதிகாலையில் படித்தால், உங்களைச் சுற்றி அமைதியான சூழல் நிலவும். இது உங்களை ஆர்வமாக படிக்க தூண்டும்.
படிக்கும் அறையில், கண்ணாடி இருந்தால் உங்களது கவனத்தை சிதறச் செய்யும். இதனால் படிக்கும் அறையில் கண்ணாடி இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
கிழக்கு அல்லது வடகிழக்கு நோக்கி அமர்ந்து படித்தால், அது உங்களுக்கு பாசிடிவ் எனர்ஜியை தரும்.
படிக்கும்போது, குறிப்பெடுத்துக்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். தேர்வு சமயத்தில் அனைத்து பாடத்தையும் திரும்ப படிக்க முடியாது. அந்த தருணத்தில், குறிப்பேடு பயன் தரும்.
ஓய்வும், உணவும் :
சத்தான உணவு உண்ணுவது அவசியம். அதேபோல, போதிய தூக்கம் மிக அவசியம்.
கேள்விக்கு எப்படி பதிலளிப்பது, என்பது முக்கியம். ஒரு நாளில் 20க்கும் மேற்பட்ட விடைத்தாள்களை ஆசிரியர் மதிப்பீடு செய்வர். அப்படி இருக்கும் போது, உங்கள் விடைகள் குறுகியதாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும்.
நம்பிக்கை முக்கியம் :
கடவுள் மீதும், உங்கள் மீதும் நம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள். நிச்சயம் அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.
அனைத்து தேர்வுகளும் முடிந்த பின் மட்டுமே, எழுதிய தேர்வை பற்றி நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள்.
தேர்வு டிப்ஸ்... அதிக மதிப்பெண் எடுக்க வேண்டுமா?
Reviewed by Bright Zoom
on
March 18, 2019
Rating:
No comments: