இன்றைய ( மே 24) நடப்பு நிகழ்வுகள் : ஒரு வரிச் செய்திகள்…!




TNPSC Group-2 தேர்வு 2019 :
இன்றைய ( மே 24) நடப்பு நிகழ்வுகள் :
 ஒரு வரிச் செய்திகள்…!


Saturday, May 25, 2019




🌀 இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI – Reserve Bank of India) “மேற்பார்வையாளர்கள் கல்லூரி” என்றறியப்படும் ஒரு புதிய நிறுவனத்தை மும்பையில் அமைக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது.

🌀 நாட்டிலேயே அதிக பெண் உறுப்பினர்களை நாடாளுமன்றம் பெற்றிருப்பது இதுவே முதன்முறையாகும்


🌀 ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையால் அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா முழுமையாக நிறுத்திவிட்டது என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஹர்ஷ் வர்த்தன் ஸ்ருங்லா தெரிவித்துள்ளார்.

🌀 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் 67.11% வாக்குகள் பதிவாகியுள்ளது.

🌀 மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் பறக்கும் காந்தவிசை ரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.


🌀 கொழும்புவில் சீனா அமைத்துள்ள சரக்கு முனையம் மற்றும் துறைமுகத்திற்கு அருகே இந்தியா, ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளின் கூட்டுறவுடன் மற்றொரு புதிய சரக்கு முனையம் அமைப்பது குறித்தும் அங்கொரு துறைமுகத்தை நிறுவுவது குறித்தும் இந்திய, ஜப்பான் அதிகாரிகளுடன் இலங்கை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

🌀 ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நவீன வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

🌀 புளோரிடாவில், ஒரே நேரத்தில் அறுபது செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

🌀 ஐ.நா.வின் உயரிய அமைதிக் காப்பு விருதான “தனித்துவமான துணிவிற்கான கேப்டன் பேய் டயக்னி விருது” மறைந்த மலாவிய வீரரான ஜான்சி சிட்டிடி என்பவருக்கு வழங்கப்பட்டது.

🌀 இந்தியா ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இறுதிச்சுற்றில் மகளிர் பிரிவில் இந்திய முன்னணி வீராங்கனை மேரி கோம், சரிதா தேவி உள்ளிட்டோரும், ஆடவர் பிரிவில் அமித் பாங்கல், சிவா தாபா, ஆஷிஸ் உள்ளிட்டோரும் தங்கம் வென்றனர்.

இன்றைய ( மே 24) நடப்பு நிகழ்வுகள் : ஒரு வரிச் செய்திகள்…! இன்றைய ( மே 24) நடப்பு நிகழ்வுகள் :   ஒரு வரிச் செய்திகள்…! Reviewed by Bright Zoom on May 25, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.