TN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 12 !!!


TN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 12 !!!
பொதுத்தமிழ் மாதிரி வினா விடைகள்!!


💥 தொல்காப்பியம் …………… வணக்கம் பற்றிக் கூறுகிறது. – நடுகல்


💥 இரவீந்திரநாத தாகூரின் ஈர்ப்பான இலக்கிய நடையின் உயர்வுக்குக் காரணம் – தாய்மொழி


💥தங்கத்தைப் போன்று ஒளி வீசுகின்ற பேச்சு யாருடையது? – மதன்மோகன் மாளவியா

💥பெரியவரின் தருமக்கணக்கில் செலவழிந்துள்ள பணம்? – இருபத்து இரண்டாயிரம்

💥காரணம் கருதி இடப்படும் பெயர்கள்? – காரணப் பெயர்கள்

💥நம் முன்னோர் எந்தக் காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்குக் குறியீடாக இட்ட பெயர். –இடுகுறிப்பெயர்


💥‘நாற்காலி’ என்னும் சொல் ……………. பெயராகும். – காரணப்பெயர்


💥‘மரம்’ என்னும் சொல் ……………. பெயராகும். –இடுகுறிப்பெயர்

💥 ‘குயில்’ என்னும் சொல் ……………. பெயராகும். –காரணப் பொதுப்பெயர்


💥 என்பணிந்த தென்கமலை – இவ்வடியில் ‘தென்கமலை’ உணர்த்தும் பொருள் …………… – தெற்கில் உள்ள திருவாரூர்

💥 குமரகுருபரர் பிறந்த ஊர் …………. – திருவைகுண்டம்

💥 நான்மணிமாலை என்பது ………. – சிற்றிலக்கியம்

💥 மண் சுமந்தார் எனக் குறிப்பிடப்படுபவர் ………….. – சிவபெருமான்

💥 ‘பூங்கோயில்’ – பிரித்து எழுதுக. – பூ + கோயில்

💥 ‘புடைத்தென்னார்’ – பிரித்து எழுதுக. – புடைத்து + என்னார்

💥 ‘என்றுருகுவார்’ – பிரித்து எழுதுக. -என்று + உருகுவார்

💥 தங்கப் பதுமையாம் தோழர்களோடு – இவ்வடியில் ‘பதுமை’ என்னும் சொல் உணர்த்தும் பொருள் – உருவம்

💥 தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என அழைக்கப்படுவது எது? - மதுரை

💥 மதுரை என்னும் சொல்லுக்கான பொருள் தருக. - இனிமை

💥 பாண்டிய நாடு எதற்குப் பெயர் பெற்றது? - முத்து

💥 மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழை இயற்றியவர் யார்? - குமரகுருபரர்

💥 நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தவர்? - பாண்டித்துரைத் தேவர்

💥 கோவலன் பொட்டல் என வழங்கப்படுவதன் காரணம் என்ன? - சிலப்பதிகாரக் காப்பியத் தலைவன் கோவலன் கொலைக்களப்பட்ட இடம் கோவலன் பொட்டல் என அழைக்கப்படுகிறது.

💥 மதுரை என்பது ............ பெயர். - இடப்பெயர்

💥 பூங்கொடி பூப் பறிக்கிறாள். இத்தொடரிலுள்ள 'பூ' என்பது ............ பெயர். - பொருட்பெயர்



TN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 12 !!!  TN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 12 !!! Reviewed by Bright Zoom on May 24, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.