9-ம் வகுப்பு பொதுத்தமிழ் வினா விடைகள்
💠திராவிட மொழிகளுள் பிற மொழித் தாக்கம் மிகவும் குறைந்ததாகக் காணப்படும் மொழி ------- ஆகும். - தமிழ்மொழி
💠ஒரே பொருளைக் குறிக்கப் பலசொற்கள் அமைந்த -----------, ----------- நிரம்பப் பெற்ற மொழி தமிழேயாகும். - சொல்வளமும், சொல்லாட்சியும்
💠இந்தியாவின் தொன்மையான ---------- பெரும்பாலனவை தமிழிலேயே அமைந்துள்ளன. - கல்வெட்டுகளில்
💠தமிழின் பல அடிச்சொற்களின் ---------- , ஒலி இடம் பெயர்தல் என்ற விதிப்படி பிற திராவிட மொழிகளில் வடிவம் மாறியிருக்கின்றன. - ஒலியன்கள்
💠தமிழில் ------------, ------------ பெரும்பாலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பெற்றிருக்கின்றன. - சுட்டுப்பெயர்களும், மூவிடப்பெயர்களும்
💠தமிழ்மொழி --------- பண்புகள் பலவற்றையும் பேணிப் பாதுகாத்து வருகிறது - மூலத்திராவிட மொழியின்
💠காலந்தோறும் தன்னைப் புதுபித்துக் கொள்ளும் பண்பு கொண்டதாக விளங்கும் மொழி? - தமிழ் மொழி
💠'ஏந்திய தீபமாய்ப் பாட்டுவரும் மானிட மேன்மையைச் சாதித்திடக்" என்னும் பாடல் வரிகளை படைத்தவர் யார்? - ஈரோடு தமிழன்பன்
💠ஏந்தி என்பதன் இலக்கணக்குறிப்பு?- வினையெச்சம்
💠தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகைக்கு -------- பெயர். - கண்ணி
💠ஊனரசம் என்ற சொல்லின் பொருள்? - குறையுடைய சுவை
💠சிந்தாமணி என்பதன் இலக்கணக் குறிப்பு? - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம்
💠தமிழ்விடு தூது எத்தனை கண்ணிகளைக் கொண்டுள்ளது? - 268
💠சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல்லையே --------- என்கிறோம். - எழுவாய்
💠ஒரு தொடரில் பயன் நிலைத்து இருக்கும் இடத்தைப் --------- என்கிறோம் - பயனிலை
9-ம் வகுப்பு பொதுத்தமிழ் வினா விடைகள்
Reviewed by Bright Zoom
on
June 19, 2019
Rating:
No comments: