TNPSC - முக்கிய நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 2019 - விருதுகள்....!!!

TNPSC  - முக்கிய நடப்பு நிகழ்வுகள்
ஏப்ரல் 2019 - விருதுகள்....!!!

Bright Zoom GK

🍀 வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் மிகப் பெரிய விருதான, பிரவாசி பாரதிய சம்மன் விருதானது, 'இராஜேந்திர குமார் ஜோஸி" என்பவருக்கு வழங்கப்பட்டது.

🍀 மூத்த நடிகையான 'ரீட்டா மோரேனா" 2019ம் ஆண்டிற்கான பீபாடி தொழில்சார் சாதனையாளர் விருதினை பெற்றுள்ளார். இந்த விருதானது மின்னணு ஊடகத்தில் ஆற்றிய பணி மற்றும் பொறுப்பின் மூலம் அந்தத் துறையில் அழியாத அடையாளத்தை விட்டுச் சென்றவர்களுக்கு வழங்கப்படுவதாகும்.

🍀 ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான 'சயத் பதக்கமானது" இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அந்நாட்டு அதிபர் 'ஷேக் கலிபா பின் சயத் அல்நாக்யான்" என்பவரால் வழங்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் உறவுகளை பராமரிப்பதில் நரேந்திர மோடியின் முயற்சிகளை அந்நாட்டு அரசு பாராட்டியுள்ளது.

🍀 வன விலங்கு சரணாலயம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளை பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பிற்கு பெரும் பங்களிப்பை அளித்ததற்காக வழங்கப்படும் 'புவி நாள் அமைப்பு நட்சத்திர விருதானது" நாகலாந்தின் வனக் காவலரான 'அலெம்பா இம்சுங்கர்" என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

🍀 'மகரிஷி பத்ராயான் வியாஸ் சம்மன் ஜனாதிபதி விருது - 2019"  கியானாதித்யா ஷக்யா என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பாலி மொழி வளர்ச்சி மற்றும் இலக்கியத்தில் அவரின் பங்களிப்பிற்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

🍀 கே.கே.பிர்லா அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் எழுத்தாளருக்கான 'சரஸ்வதி சம்மன் விருது - 2018", தெலுங்கு எழுத்தாளர் 'மு.சிவா ரெட்டி" என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரின், அவர், Pakkaki
Ottigilite என்ற பாடல் தொகுப்பிற்கு
இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.


🍀 ரஷ்ய கூட்டமைப்பிற்கும் இந்திய குடியரசிற்கும் இடையில் உறவுகளை வலுப்படுத்துவதற்காக சிறப்பான சேவையை அளித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, ரஷ்ய நாட்டின் மிக உயர்ந்த விருதான  Order of St Andrew theA postle”என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

🍀 மொகாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 4வது அப்துல் கலாம் புத்தாக்க மாநாட்டில், டாக்டர் யு.மு.சிங் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.


🍀 2019ம் ஆண்டிற்கான தேசிய அறிவுசார் சொத்துரிமைக்கான விருதானது கேரள வேளாண் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.





TNPSC - முக்கிய நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 2019 - விருதுகள்....!!! TNPSC  - முக்கிய நடப்பு நிகழ்வுகள்  ஏப்ரல் 2019 - விருதுகள்....!!! Reviewed by Bright Zoom on September 02, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.