TNPSC -பொது அறிவு அறிவியல் வினா விடைகள்

  TNPSC -பொது அறிவு
அறிவியல் வினா விடைகள்

💐பொ.ஆ 1772ம் ஆண்டு, வளிமண்டலத்தில் நைட்ரஜன் வாயு உள்ளது என்பதைக் கண்டறிந்தவர் யார்?

 - டேனியல் ரூதர்போர்டு

💐பொ.ஆ 1774ம் ஆண்டு, வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் உள்ளது என்பதைக் கண்டறிந்தவர் யார்?

- ஜோசப் பிரிஸ்ட்லி

💐'ட்ரோபோஸ்" என்ற கிரேக்கச் சொல்லிற்கு -------- என்று பொருள்படும்.

- மாறுதல்

💐'வானிலையை உருவாக்கும் அடுக்கு" என்று அழைக்கப்படும் அடுக்கு எது?

- வளிமண்டல கீழ் அடுக்கு

💐ஓசோன் மூலக்கூறுகள் அதிகம் நிறைந்து காணப்படும் அடுக்கு எது?

 - மீள் அடுக்கு

💐வளிமண்டலத்தில் 50கி.மீ முதல் 80கி.மீ உயரம் வரை பரவிக் காணப்படும் அடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 - இடையடுக்கு

💐வெப்ப அடுக்கின் கீழ்ப்பகுதியில் உள்ள வாயுக்களின் அளவு சீராக காணப்படுவதால், இவ்வடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

- ஹோமோஸ்பியர்

💐வெப்ப அடுக்கின் மேல்பகுதியில் உள்ள வாயுக்களின் அளவு சீரற்று காணப்படுவதால் அப்பகுதி ------------- என அழைக்கப்படுகின்றது.

- ஹெட்ரோஸ்பியர்

💐அயனோஸ்பியர் எந்த அடுக்கில் அமைந்து காணப்படுகிறது?

 - வெப்ப அடுக்கு பகுதியில்

💐வளிமண்டலத்தில் ஒரு நாளில், ஓர் இடத்தில் நடைபெறும் வளிமண்டல நிகழ்வுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 - வானிலை

💐நீண்ட காலத்திற்கு மிகப்பரந்த நிலப்பரப்பில் ஏற்படும் வானிலையின் சராசரியே -------- எனப்படும்.

 - காலநிலை

💐சூரியக் கதிர்வீச்சுக்கும், புவிக்கதிர்வீச்சுக்கும் இடையில் நிலவும் சமநிலைத்தன்மையை --------- என்று அழைக்கிறோம்.

- புவியின் வெப்பத்திட்டம்

💐வெப்ப ஆற்றலின் முக்கிய ஆதாரமாக கருதப்படுவது எது?

- சூரியன்

💐புவி மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை --------- ஆகும்.
 - 13 டிகிரி செல்சியஸ்



TNPSC -பொது அறிவு அறிவியல் வினா விடைகள்   TNPSC -பொது அறிவு   அறிவியல் வினா விடைகள் Reviewed by Bright Zoom on September 15, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.