உலக வரலாற்றில் இன்று ! இன்றைய வரலாற்று நிகழ்வுகள் அக்டோபர் (07.10.2019)

உலக வரலாற்றில்  இன்று !
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் (07.10.2019)

Bright Zoom Today :

இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த அறிவியலறிஞர்... பிறந்த தினம் இன்று !

உலக குடியிருப்பு தினம்


மக்கள் நகரங்களில் குடியேறுவதால் வாழ்விட பிரச்சனை ஏற்படுகிறது. இதன்மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக ஐ.நா. பொதுச்சபை 1985ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது. இதன்படி அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமையை (07.10.2019) உலக குடியிருப்பு தினமாக அறிவித்தது. நகரத்தை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், நகர மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது இதன் நோக்கமாகும்.உலக கட்டிடக்கலை தினம்


கட்டிடக்கலை என்பது கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும், அறிவியலும் ஆகும். கட்டிடக் கலையானது கணிதம், அறிவியல், கலை, தொழில்நுட்பம், சமூக அறிவியல், அரசியல், வரலாறு, தத்துவம் போன்றவற்றுடன் தொடர்புடைய ஒரு பல்துறைக்களமாகும். சர்வதேச கட்டிடக் கலையினர் ஒன்றியம் 2005ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமையை (07.10.2019) உலக கட்டிடக்கலை தினமாக அறிவித்து கொண்டாடி வருகிறது.துர்காவதி தேவி


⚑ சுதந்திரப் போராட்ட வீராங்கனை துர்காவதி தேவி 1907ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் பிறந்தார்.

⚑ இந்திய விடுதலைப் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த பகவதி சரண் வோரா என்பவரை திருமணம் செய்து கொண்டு ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக் கட்சியின் செயல்துடிப்பு மிக்க உறுப்பினராக மாறினார்.

⚑ இருவரும் தங்களுக்கு கிடைத்த செல்வத்தை விடுதலைப் போராட்ட இயக்கத்திற்கு செலவழித்தனர். லாலா லஜ்பத் ராயின் மரணத்திற்கு பழி வாங்குவதற்கான திட்டம் தீட்ட கட்சியின் கூட்டம் இவரது தலைமையில் நடைபெற்றது.

⚑ பஞ்சாப் சிங்கத்தின் மரணத்துக்கு காரணமான காவல்துறை அதிகாரி ஸ்காட்டை கொலை செய்ய முடிவு செய்யப்பட்டது. முதலில் தானே இந்த பணியை மேற்கொள்ள விரும்பினார். ஆனால், இறுதியில் பகத் சிங் மற்றும் சுகதேவிடம் இந்த பணி ஒப்படைக்கப்பட்டது.

⚑ இந்திய அக்னி என போற்றப்பட்ட வீராங்கனையான துர்காவதி தேவி 1999ஆம் ஆண்டு மறைந்தார்.நீல்ஸ் போர்


💣 அணு அமைப்பு பற்றிய ஆராய்ச்சிகளில் முன்னோடியாக திகழ்ந்த நீல்ஸ் ஹென்றிக் டேவிட் போர் 1885ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி டென்மார்க் நாட்டிலுள்ள கோப்பன்ஹேகனில் பிறந்தார்.

💣 இவர் முதன்முதலாக 1913ஆம் ஆண்டு எலெக்ட்ரான்கள் அணுக்களின் உட்கருவை சுற்றி வட்டப்பாதையில் சுழலுகின்றன என்பதை கண்டறிந்தவர்.

💣 அணுக்களின் கட்டமைப்புக்கும், குவாண்டம் இயக்கவியலுக்கும் அடிப்படை விதிகளை உருவாக்கியவர். இதற்காக நீல்ஸ் போர் 1922ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசினையும் பெற்றார்.

💣 இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த அறிவியலறிஞராகவும், சிந்தனையாளராகவும் விளங்கிய நீல்ஸ் போர் 1962ஆம் ஆண்டு மறைந்தார்.


உலக வரலாற்றில் இன்று ! இன்றைய வரலாற்று நிகழ்வுகள் அக்டோபர் (07.10.2019) உலக வரலாற்றில்  இன்று !  இன்றைய வரலாற்று நிகழ்வுகள்  அக்டோபர் (07.10.2019) Reviewed by Bright Zoom on October 07, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.