உலக வரலாற்றில் இன்று ! அக்டோபர் 12 Bright Zoom Today

உலக வரலாற்றில் இன்று !
அக்டோபர் 12
Bright Zoom Today

மூட்டு வலிக்கு குட்-பை சொல்லுங்கள்.. இன்று உலக மூட்டு வலி தினம்...!

இன்றைய நிகழ்வுகள்

இன்றைய பொன்மொழி
உன்னிடம் எது இருக்கிறதோ, அதற்கு நன்றியுடன் இரு.. காரணம், இந்த உலகில் பலர் எதுவுமே இல்லாமல் தங்களின் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள்.

வரலாற்றில் இன்று !
உலக ஆர்த்ரிடிஸ் தினம்.

1996ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் 12ஆம் தேதியை சர்வதேச மூட்டு அழற்சி நோய் தினம் (அ) உலக ஆர்த்ரிடிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இத்தினம் கீல்வாதம் மற்றும் தசை நோய்கள்  பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.

நோய்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை சமூக வலைதளங்களின் மூலம் பராமரிப்பாளர்களுக்கு தகவல் தெரிவிப்பது இத்தினத்தின் நோக்கமாகும்.எல்மர் அம்ப்ரோஸ் ஸ்பெர்ரி கப்பல்களில் பயன்படும் சுழிதிசைகாட்டியை  கண்டறிந்த எல்மர் அம்ப்ரோஸ் ஸ்பெர்ரி 1860ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.

இவர் ஜப்பானீஸ் நிறுவனங்கள் மற்றும் ஜப்பானீஸ் அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளார்.

அமெரிக்க கண்டுபிடிப்பாளரான எல்மர் அம்ப்ரோஸ் ஸ்பெர்ரி 1930ஆம் ஆண்டு நியூயார்க்கில் மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்

1918ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி இந்திய தொழிலதிபர் கிருஷ்ண குமார் பிர்லா (கே.கே.பிர்லா) பிறந்தார்.

1964ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி சோவியத் ஒன்றியம் வஸ்கோத் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. அதுவே பல விண்வெளி வீரர்களை விண்ணுக்கு கொண்டு சென்ற முதலாவது விண்கலம் ஆகும்.

1999ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி உலகின் மக்கள் தொகை 6 பில்லியனை எட்டியது.







உலக வரலாற்றில் இன்று ! அக்டோபர் 12 Bright Zoom Today உலக வரலாற்றில் இன்று !  அக்டோபர் 12  Bright Zoom Today Reviewed by Bright Zoom on October 12, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.