Bright Zoom Today News
அக்டோபர் 10
மாலை நேரச் செய்திகள்
9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
விதிகளை தளர்த்தியது சவூதி அரேபிய அரசு :
துணை ராணுவப் படையான பாதுகாப்பு படைகளில் பெண்கள் சேருவதற்கு கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், ராணுவம், கடற்படை, விமானப்படைகளிலும் பெண்கள் சேரலாம் என சவூதி அரசு அறிவித்துள்ளது.
ஹெலிகாப்டர் கண்காட்சி :
சீனாவில், 5வது முறையாக ஹெலிகாப்டர் கண்காட்சி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் வடக்கு துறைமுக நகரமான டியான்ஜின்னில் வர்த்தக ரீதியிலான ஹெலிகாப்டர் கண்காட்சி தொடங்கியுள்ளது.
மாநிலச் செய்திகள்
நிறுவனங்களுக்கு அழைப்பு :
இந்தியாவில் உற்பத்தி ஆலைகள் அமைக்க வருமாறு, பிரான்ஸ் ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனங்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
கனமழை பெய்ய வாய்ப்பு :
தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், தருமபுரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதல் இடம் :
இந்தியாவில் அதிக சொத்துக்கள் வைத்துள்ள மாநில கட்சிகளில் பணக்கார கட்சியாக உத்தரப்பிரதேச மாநிலத்தின் சமாஜ்வாதி கட்சி ரூ.583.28 கோடி சொத்து மதிப்புகளுடன் முதல் இடம் பிடித்துள்ளது.
விமானிகளுக்கு ஏர் இந்தியா பயிற்சி :
பிரதமரின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டு வரும் போயிங் 777 ரக விமானத்தை இயக்குவதற்காக இந்திய விமானப்படையை சேர்ந்த 10 விமானிகளுக்கு ஏர் இந்தியா சிறப்பு பயிற்சி அளித்து வருகிறது.
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 17-வது கூட்டம் :
பெங்கள ருவில் காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 17-வது கூட்டம் தொடங்கி நடைபெற்றது. ஒழுங்காற்றுக்குழு தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெற்றுவரும் கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட 4 மாநில பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
மாவட்டச் செய்திகள்
உள்ளாட்சி தேர்தல் :
உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் சென்னையில் இன்று நடைபெற்றது.
விடுமுறை கிடையாது :
மாமல்லபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
இரண்டாவது டெஸ்ட் போட்டி :
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இன்று நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார்.
புரோ கபடி லீக் :
இன்று நடைபெறும் புரோ கபடி லீக் ஆட்டங்களில் யு மும்பா-ஹரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி :
11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் 5-0 என்ற கணக்கில் கொலம்பிய வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

Bright Zoom Today News அக்டோபர் 10 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
October 10, 2019
Rating:
No comments: