Bright Zoom Today News
அக்டோபர் 23
மாலை நேரச் செய்திகள்
தீபாவளி... பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே - செய்திகள் !
உலகச் செய்திகள்
சந்திராயன் :
நிலவை சுற்றி வரும் நாசாவின் ஆர்பிட்டர் அனுப்பிய புகைப்படத்தில், சந்திராயன் - 2ன் லேண்டர் விக்ரம் தொடர்பான எவ்வித ஆதாரங்களும் இல்லை என நாசா தெரிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
மிதமான மழை பெய்யும் :
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கனமழை :
கர்நாடகாவில் கனமழை நீடித்து வரும் நிலையில், மழையால் பல்வேறு இடங்களிலும் வீடுகள், சாலைகள் சேதமடைந்துள்ளன.
தீபாவளி பண்டிகை :
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் அதற்கான பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஜவுளிக்கடைகள், இனிப்புக்கடைகளில் வியாபாரம் களைகட்டியுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு வெடிக்கும் நேரத்தை, தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி, தீபாவளி பண்டிகை நாளன்று, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
மத்திய அரசு அனுமதி :
புதிய நிறுவனங்கள் பெட்ரோல் பங்குகளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதிய பெட்ரோல் பங்க் திறக்க அனுமதிப்பதால் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்ல தடை :
தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்ல வேண்டாம் என இந்து சமய அறநிலையத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
ஸ்மார்ட் கைக்கடிகாரம் :
மெட்ரோ ரயில் பயணத்திற்கு நவீன ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை மெட்ரோ நிர்வாகம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. ரூ.1,000 செலுத்தி பெற்றுக்கொண்டு எளிதில் பயணம் செய்யலாம்.
மாவட்டச் செய்திகள்
சிறப்பு பேருந்து சேவை :
சென்னையில் தீபாவளி பண்டிகையையொட்டி நாளை முதல் 24 மணிநேரமும் மாநகர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
பி.சி.சி.ஐ. தலைவர் :
பி.சி.சி.ஐ. தலைவராக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி பதவியேற்றுக் கொண்டார்.
பேட்ஸ்மேன் தரவரிசை :
தென்னாப்பிரிக்கா தொடரில் மூன்று சதங்களுடன் 500 ரன்களுக்கு மேல் குவித்த ரோகித் சர்மா பேட்ஸ்மேன் தரவரிசையில் 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி :
இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவா-சென்னை அணிகள் மோதுகின்றன.

Bright Zoom Today News அக்டோபர் 23 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
October 23, 2019
Rating:
No comments: