Bright Zoom Today News
நவம்பர் 15
மாலை நேரச் செய்திகள்
6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
பலத்த பாதுகாப்பு :
இலங்கையில் நாளை அதிபர் தேர்தல் நடைபெறுவதையொட்டி, அந்நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மாநிலச் செய்திகள்
6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு :
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக கடலூர், திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, சேலம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.
சிவசேனா கூட்டணி ஆட்சி :
மராட்டியத்தில் ஆட்சிமைக்க சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நாளை மராட்டிய ஆளுநரை சந்திக்க உள்ளனர்.
நாடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் :
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு நாளை (16.11.2019) அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார்.
ஜெகன் மோகன் ரெட்டி திட்டவட்டம் :
ஆங்கில கல்வி திட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவது இல்லை என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
புதிய மாவட்டங்களுக்கு எஸ்.பிக்கள் நியமனம் :
புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு காவல்துறை எஸ்.பிக்களை நியமனம் செய்து தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.
பாதுகாப்பு தர மாட்டோம் :
சபரிமலைக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் பாதுகாப்பு தர மாட்டோம் என கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
குடிமராமத்து திட்டம் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது :
குடிமராமத்து திட்டம் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளதாகவும், அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
விருப்பமனு விநியோகம் தொடங்கியது :
அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்பமனு விநியோகம் தொடங்கியது. இன்றும், நாளையும் விருப்பமனுக்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன.
விளையாட்டுச் செய்திகள்
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான நியூஸிலாந்து அணி அறிவிப்பு :
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான நியூஸிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன் சேர்க்கப்பட்டுள்ளார்.
முதல் டெஸ்ட் :
வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் இன்று இரட்டை சதமடித்து அசத்தினார்.
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி :
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கல பதக்க வென்றார்.
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் :
சூரத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட்டில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜம்மு-காஷ்மீர் அணி அபார வெற்றி பெற்றது.

Bright Zoom Today News நவம்பர் 15 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
November 15, 2019
Rating:
No comments: