3000 அருந்ததியர் குடும்பங்கள் ஜனவரி 5-ல் இஸ்லாம் மதத்தை தழுவுவதாக அறிவிப்பு!
Bright Zoom News
டிசம்பர் 25, 2019
Bright Zoom News
டிசம்பர் 25, 2019
கோவை : தமிழகத்தில் வாழும் சுமார் 3000 அருந்ததியர் இன மக்கள் இஸ்லாம் மதத்தை தழுவவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக, சிக்கதாசம்பாளையம் நடூர் கிராமத்தில் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் தீண்டாமை சுற்றுச்சுவர் இடிந்தது. இந்த சுற்றுச்சுவர் அருகிலுள்ள அரசு தொகுப்பு வீடுகளின் மேல் விழுந்ததில், அங்கு வாசித்த 10 பெண்கள், 3 ஆண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இறந்த அனைவரும் அருந்ததியர் இன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த சுவரின் உரிமையாளர் பெயருக்காக கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இதற்காக போராடிய நாகை திருவள்ளுவன் போலீசாரால் கொடூரமாக தக்கப்பட்டார்.
இந்நிலையில் அருந்ததியருக்கு உரிய சுயமரியாதை இந்து மதத்தில் அளிக்கப்படவில்லை என்பதால் வரும் ஜனவரி 5 ஆம் தேதி 3000 அருந்ததி இன மக்கள் இஸ்லாம் மதத்தை தழுவுவதாக அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே மதுரை அருகே சந்தையூரை சேர்ந்த மக்கள் சாதி வேறுபாட்டை குறிக்கும் தீண்டாமை சுவரை இடிக்க வேண்டும் என கோரி பல போராட்டங்களை நடத்தினர். ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததாலும் இந்து மதத்தில் தங்களுக்கு சுய மரியாதை இல்லாததாலும் தற்போது அருந்ததி இன மக்கள் அனைவரும் முஸ்லிம் மதத்திற்கு மாறப் போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 5 ஆம் தேதி 3000 அருந்ததி இன மக்கள் இஸ்லாம் மதத்தை தழுவுவதாக அறிவித்துள்ளனர்.
Reviewed by Bright Zoom
on
December 25, 2019
Rating:
No comments: