இரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டுக்களின் அளவை அதிகரிக்கும் அற்புதமான உணவுவகைகள்!!!

இரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டுக்களின் அளவை அதிகரிக்கும் அற்புதமான உணவுவகைகள்!!!

Bright Zoom Healthy

உடலில் உள்ள இரத்தத்தின் உயிரணுக்களில் உள்ள ஒரு வகை தான் இரத்தத் தட்டுக்கள். இரத்த சிவப்பணுக்களைப் போன்றே இவையும் மிகவும் இன்றியமையாதவை. பொதுவாக இந்த இரத்தத் தட்டுக்களானது இரத்தம் உறைதலில் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த இரத்தத் தட்டுக்களின் அளவு குறைவாக இருந்தால், இரத்த உறையாமை ஏற்பட்டு இரத்தப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது. அதே சமயம் இது அளவுக்கு அதிகமாக இருந்தால், இரத்தக் கட்டுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. செரிமான மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!!! எனவே இரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டுக்களின் அளவை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமானது. முக்கியமாக இந்த இரத்தத் தட்டுக்களின் அளவானது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் போது குறைய ஆரம்பிக்கும். இப்படி குறைவதால் தான் பலர் டெங்கு காய்ச்சலால் மரணமடைகின்றனர். அதிலும் மழைக்காலத்தில் தான் டெங்கு காய்ச்சல் அதிகம் வரும் என்பதால், மழைக்காலத்தில் இரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டுக்களை சீராக பராமரிக்க வேண்டும். ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டுக்கு இந்த உணவுகள் கை கொடுக்கும்! அதற்கு இரும்புச்சத்து அதிகம் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவையும் உட்கொள்ள வேண்டும். சரி, இப்போது இரத்தத் தட்டுக்களின் அளவை அதிகரிக்கும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

பப்பாளி இலை:

பப்பாளி இலை ஒருமுறையாவது பழம் வந்த பப்பாளி மரத்தின் இலையை எடுத்து, அதனை சுடுநீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை வடிகட்டி குளிர வைத்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், இரத்தத் தட்டுக்களின் அளவு தானாக அதிகரிக்கும். மாதுளை சிவப்பாக இருக்கும் அனைத்து பழங்களிலும் இரும்புச்சத்தானது அதிகம் இருக்கும். அதில் முக்கியமான ஒரு பழம் தான் மாதுளை. இதில் இரும்புச்சத்து மட்டுமின்றி, வைட்டமின்களும் அதிக அளவில் நிறைந்துள்ளன. எனவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால், இதனை தவறாமல் உட்கொண்டு வாருங்கள்.


பச்சை இலைக் காய்கறிகள்:

பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின் கே அதிக அளவில் உள்ளதால், இதனை உட்கொண்டு வந்தாலும், இரத்தத் தட்டுக்களின் அளவு அதிகரிக்கும். அதிலும் பசலைக்கீரை, கேல் போன்றவற்றை உட்கொண்டு வருவது மிகவும் நல்லது.

பூண்டு இயற்கையாக இரத்தத் தட்டுக்களின் அளவை அதிகரிக்க வேண்டுமெனில், பூண்டை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.

 பீட்ரூட்:

பீட்ரூட் சிவப்பு நிற காய்கறிகளில் ஒன்று என்பதால், இதிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இது இரத்த சிவப்பணுக்களின் அளவையும் அதிகரிக்கும். எனவே தினமும் ஒரு சிறிது பீட்ரூட், கேரட் போன்றவற்றை எடுத்து வந்தால், உடலில் இரத்த அணுக்களின் அளவை சீராக பராமரிக்கலாம். ஈரல் இரத்தத் தட்டுக்களின் அளவை அதிகரிக்கும் உணவுகளில் ஒன்று தான் ஆட்டு ஈரல். ஆகவே இதனை வாரம் ஒருமுறை எடுத்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

உலர் திராட்சை :

உலர் திராட்சையில் 30 சதவீதம் இரும்புச்சத்து உள்ளது. எனவே தினமும் ஒரு கையளவு உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால், இரத்தத் தட்டுக்களின் அளவு மட்டுமின்றி, இரத்த சிவப்பணுக்களின் அளவும் அதிகரிக்கும். ஆப்ரிக்காட் ஆப்ரிக்காட்டில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே இந்த பழம் கிடைத்தால், தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் அந்த அளவில் இந்த பழத்தில் அத்தனை சத்துக்களானது நிறைந்துள்ளது.



பேரிச்சம் பழம்:

அனைவருக்குமே பேரிச்சம் பழம் சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரிக்கும் என்பது தெரியும். ஆகவே இதனையும் அன்றாடம் தவறாமல் எடுதது வாருங்கள்.

முழு தானியங்கள்:

முழு தானியங்களில் நார்ச்சத்து, கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. ஆகவே இவற்றை அன்றாடம் எடுத்து வந்தாலேயே, இரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டுக்களின் அளவை சீரான அளவில் வைத்துக் கொள்ளலாம்.



இரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டுக்களின் அளவை அதிகரிக்கும் அற்புதமான உணவுவகைகள்!!! இரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டுக்களின் அளவை அதிகரிக்கும் அற்புதமான உணவுவகைகள்!!! Reviewed by Bright Zoom on December 01, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.