Bright Zoom TNPSC - 2020
மின் இயல் தொடர்பான பொது அறிவு வினா விடைகள்!!!
மின் இயல் தொடர்பான பொது அறிவு வினா விடைகள்!!!
⚡ வேதி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றித் தரும் ஓர் அமைப்பின் பெயர் என்ன?
- மின்கலம்
⚡ ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய மின்கலன்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- முதன்மை மின்கலன்
⚡ மின்னேற்றம் செய்து பலமுறைகள் பயன்படுத்தும் மின்கலன்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- துணை மின்கலன்கள் (சேமிப்பு மின்கலன்கள்)
⚡ முதன் முதலில் மின்கலம் யாரால் உருவாக்கப்பட்டது?
- லூயி கால்வானி
⚡ லூயி கால்வானி எந்த நாட்டினை சேர்ந்தவர்?
- இத்தாலி
⚡ மின்கலம் யாரால் மேம்படுத்தப்பட்டது?
- அலெக்ஸ்சாண்ரோ வேல்டா
⚡ ஒளி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் மின்கலத்தின் பெயர் என்ன?
- சூரிய மின்கலன்
⚡ ----------- என்பது மின்கலத்தின் நேர்முனையில் இருந்து எதிர்முனைக்கு மின்னூட்டம் செல்லும் தொடர்ச்சியான மூடிய பாதையாகும்?
- மின்சுற்று
⚡ மின்சுற்றுகளில் செல்லும் மின்னோட்டத்தைக் கண்டறியப் பயன்படும் கருவியின் பெயர் என்ன?
- கால்வனா மீட்டர்
⚡ மின்சாரத்தை உருவாக்கவல்ல மீனின் பெயர் என்ன?
- மின் விலாங்கு மீன்
⚡ ---------- என்பது இரு மேகக்கூட்டங்களுக்கு இடையே நடைபெறும் வலிமையான மின்னோட்டத்தால் பெறப்படும் பொறி ஆகும்?
- மின்னல்
⚡ எதன் வலியே செல்லும் மின்னோட்டம் வெப்பவிளைவை ஏற்படுத்தும்?
- கம்பியின் வலியே
⚡ நிக்கல் மற்றும் குரோமியம் சேர்ந்த உலோகக் கலவையின் பெயர் என்ன?
- நிக்ரோம்
⚡ மின்விளக்கினுள் டங்ஸ்டனால் செய்யப்பட்ட சுருள்வடிவக் கம்பி உள்ளது இது ------------ எனப்படும்.
- மின்னிழை
⚡ மின்சுற்றில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு அமைப்பு ------------ எனப்படும்?
- மின் உருகு இழை
Bright Zoom TNPSC - 2020 மின் இயல் தொடர்பான பொது அறிவு வினா விடைகள்!!!
Reviewed by Bright Zoom
on
January 26, 2020
Rating:
No comments: