Bright Zoom TNPSC GK
கேள்வி கேட்போம்...! வாருங்கள்...!!
கிராம சபையில்... !!!
ஜனவரி 26
இன்று கிராம சபை கூட்டம் !!
★ கிராம சபை என்பது என்ன...?
கிராம சபை என்பது இந்திய அரசியல் சாசனத்தால் உருவாக்கப்பட்ட சபையாகும். மேலும், கிராம சபைக்கு மாநிலச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட, அதன் அதிகாரத்திற்கு உட்பட்டு எடுக்கும் முடிவுகளை யாராலும் மாற்ற இயலாது.
இந்த கிராம சபைக்கான அதிகாரம் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியானது கிடையாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும். அந்த மாநில அரசின் பஞ்சாயத்து சட்டத்திற்கு ஏற்ப தான் கிராம சபை செயல்பட முடியும்.
★ எந்தெந்த தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும்?
1. ஜனவரி 26 (குடியரசு தினம்)
2. மே 1 (உழைப்பாளர் தினம்)
3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்)
4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி)
★ கிராம சபை கூட்டம் எந்த இடத்தில் நடக்கும்? யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?
கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்டப் பகுதிகளில் ஏதாவது ஒரு பொது இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும். கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் கிராம சபையில் கலந்துகொள்ளலாம். அதாவது ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.
★ கிராம சபையின் தலைவர் யார்?
கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவர். தலைவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் கிராம சபையின் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார்.
★ கிராம சபையில் குறைந்தபட்சம் எத்தனைப் பேர் கலந்துகொள்ள வேண்டும்?
உங்கள் கிராம பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 பேர் என்றால், குறைந்தபட்சம் 50 பேர் கிராம சபையில் கலந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் கிராம சபை ஏற்றுக்கொள்ளப்படும். மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப கலந்துகொள்பவரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
★ கிராம சபை தீர்மானம் எங்கெல்லாம் செல்லுபடி ஆகும்?
சட்டமன்ற, நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கு உண்டு. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட எந்த ஒரு கிராம சபை தீர்மானமும், எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும். அரசு அலுவலகங்களிலும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
★ எந்தெந்த விஷயங்களுக்காகக் கிராம சபையில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றலாம்?
உங்கள் கிராமத்திற்கு சம்மந்தப்பட்ட எந்த ஒரு விஷயத்திற்கும், தேவைக்கும் கிராம சபை தீர்மானம் நிறைவேற்றலாம். அருகிலுள்ள கிராமத்தின் பிரச்சனையை தீர்க்கவோ அல்லது மாநில அளவில் சில கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்றோ உங்கள் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுவது பயனளிக்காது.
★ கிராம சபை தீர்மானம் எத்தனை நாட்களுக்கு செல்லுபடி ஆகும்?
கிராம சபை தீர்மானம் காலாவதியே ஆகாது. ஒருமுறை சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மறுபரிசீலனை செய்தோ, மாற்றம் செய்தோ அல்லது மறுத்தோ வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் முந்தைய தீர்மானம் செயல் இழக்கக்கூடும்.
★ சிறப்பு கிராம சபை என்றால் என்ன?
வருடத்தில் நான்கு நாட்கள் கிராம சபை கூட்டம் கட்டாயம் நடைபெறும். இந்தக் கிராம சபைகளையும் தாண்டி கூடுதலாகக் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மக்கள் நினைத்தால் கிராம சபை கூட்டத்தை நடத்தலாம். அவ்வாறு கூட்டப்படும் கிராம சபை, சிறப்பு கிராம சபை என்று அழைக்கப்படும்.

Bright Zoom TNPSC GK கேள்வி கேட்போம்...! வாருங்கள்...!! கிராம சபையில்... !!!
Reviewed by Bright Zoom
on
January 28, 2020
Rating:
No comments: