ஏப்ரல் 23 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஏப்ரல் 23 மாலை நேரச் செய்திகள்

தமிழகத்தில் எந்தெந்த ஆலைகள் இயங்கலாம்?.. அரசாணை வெளியீடு - செய்திகள்..!!

உலகச் செய்திகள்
பரிசோதிக்க அனுமதி :

ஜெர்மனியில் கொரோனா வைரஸூக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலச் செய்திகள்
மே 3ஆம் தேதிக்கு பிறகு :

மே 3ஆம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

புதிய சிறப்பு திட்டம் :

தமிழ்நாட்டில் பொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் நலத்தை பேணவும் ஆரோக்கியம் என்ற புதிய சிறப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

நிறுத்திவைப்பு :

மத்திய அரசு ஊழியர்களுக்கான 2021ஆம் ஆண்டு ஜுலை வரையிலான அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அரசாணை வெளியீடு :

தமிழகத்தில் எந்தெந்த ஆலைகள் தொடர்ந்து இயங்கலாம் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட ரசாயன ஆலைகள், கரும்பு, உர கண்ணாடி, டயர், மிகப்பெரிய காகித ஆலைகள் ஆகியவை தொடர்ந்து இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி வழங்கல் :

தமிழகத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகளை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதிக்காத ஊரகப்பகுதிகளில் ஏரிகளை தூர்வாருதல், கட்டுமான பணிகள் சமூக இடைவெளியுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பச்சை காய்கறிகள் ஏற்றுமதி :

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து முதன்முறையாக லண்டனுக்கு 4 டன் அளவிலான பச்சை காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

மழைக்கு வாய்ப்பு :

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுகாதார வசதியை உருவாக்க உத்தரவு :

டெல்லியில் காவல்துறையினருக்கு பிரத்யேக சுகாதார வசதியை உருவாக்கவும், சிறப்பு கொரோனா பரிசோதனை மையத்தை அமைக்கவும் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மாவட்டச் செய்திகள்
காய்கறி சந்தைகள் இயங்காது :

ஊரடங்கு காரணமாக திருச்சி மாநகர் பகுதிகளில் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் தற்காலிக காய்கறி சந்தைகள் இயங்காது என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்
ஒத்திவைக்க முடியாது :

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை மேலும் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்க முடியாது என போட்டி அமைப்புக் குழு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 23 மாலை நேரச் செய்திகள் ஏப்ரல் 23 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on April 23, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.