ஏப்ரல் 23 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஏப்ரல் 23 காலை நேரச் செய்திகள்

மாநில முதல்வர்களுடன்... வரும் 27ஆம் தேதி பிரதமர் ஆலோசனை - செய்திகள் !

உலகச் செய்திகள்
பில்கேட்ஸ் பாராட்டு :

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

செயற்கைக்கோள் படத்தை நாசா வெளியிட்டது :

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கால், காற்று மாசு பெருமளவில் குறைந்து, இந்தியாவே சுத்தமாகி உள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
வரும் 27ஆம் தேதி :

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் வரும் 27ஆம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

பிரதமர் மோடி உரை :

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், மருத்துவ வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய வண்ணம் உள்ளார். இந்நிலையில், தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி (நாளை) நாடு முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்து அமைப்புகளுடன் பிரதமர் மோடி உரையாட உள்ளார்.

மாவட்ட அளவில் குழு :

கொரோனா வைரஸால் உயிரிழப்பு ஏற்பட்டதா? என்பது குறித்த சரியான காரணத்தை கண்டறிய மாநில, மாவட்ட அளவில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இன்று காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை :

ஊரடங்கிலிருந்து தொழிற்சாலைகளுக்கு படிப்படியாக விலக்கு அளிப்பது தொடர்பாக, தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு :

கொரோனா வைரஸ் பரவலைக் கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஆரோக்கிய சேது மற்றும்IVRS செயலிகளைக் கல்வித்துறை அதிகாரிகள், பணியாளர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பொதிகையிலும் கல்வி ஒளிபரப்பு :

கல்வி தொலைக்காட்சி சேனல் மூலம் கல்வி கற்றல் மாணவர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளதையடுத்து, கூடுதலாக பொதிகையிலும் கல்வி ஒளிபரப்பு செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

காலக்கெடு நீட்டிப்பு :

உஜ்வாலா திட்ட பயனாளிகள் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் பெற காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

கூடுதலாக பேருந்துகள் இயக்க திட்டம் :

தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் கூடுதலாக பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்டச் செய்திகள்
ரோபோ கார் :

கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு உதவும் வகையில், மருந்துகளை எடுத்துச் செல்லும் சிறிய அளவிலான ரோபோ காரை கோவை இளைஞர் கார்த்திக் வடிவமைத்துள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்
செஸ் சாம்பியன்ஷிப் தொடர் :

ஆன்லைனில் நடைபெற உள்ள நேஷன்ஸ் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியில் முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் களமிறங்குகிறார்.

ஏப்ரல் 23 காலை நேரச் செய்திகள் ஏப்ரல் 23 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on April 23, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.