Bright Zoom Today News ஏப்ரல் 24 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஏப்ரல் 24 காலை நேரச் செய்திகள்

ரேஷன் கார்டு இல்லாவிட்டாலும் மளிகைப் பொருட்கள்.. தமிழக அரசு - செய்திகள்..!!


உலகச் செய்திகள்
இங்கிலாந்தில் புதிய முயற்சி :

மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் கொரோனா நோயாளிகளை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்று இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாநிலச் செய்திகள்
தமிழக அரசு அறிவிப்பு :

ரேஷன் பொருட்கள் வாங்க இன்று டோக்கன் விநியோகம் வழங்கப்படாது என்றும், மே மாதம் 2, 3ஆம் தேதிகளில் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ரேஷன் கார்டு இல்லாவிட்டாலும் மளிகைப் பொருட்கள் :

ரேஷன் கார்டு இல்லையென்றாலும் 500 ரூபாய் மளிகைப் பொருட்கள் அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சம்பளம் உயர்த்தப்படும் :

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஒப்பந்த டாக்டர்களின் சம்பளம் உயர்த்தப்படும் என்று கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

தலைமை செயலாளர் உத்தரவு :

கர்நாடகத்தில் ஊரடங்கு மேலும் தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி கட்டுமான பணிகள், செல்போன் ரீசார்ஜ் கடைகளுக்கு விலக்கு அளித்து அரசின் தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து நீதிபதிகள் கூட்டம் :

மே மாதம் முதல் நீதிமன்ற பணிகளை எப்படி நடத்துவது? என்பது குறித்து முடிவெடுக்க, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில், வரும் 29ஆம் தேதி காணொலிக் காட்சியின் மூலம் அனைத்து நீதிபதிகள் கூட்டம் நடைபெற உள்ளது.

இன்று முதல் 27ஆம் தேதி வரை :

தமிழகத்தில் இன்று முதல் 27ஆம் தேதி வரை சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு அறிவிப்பு :

வங்கிச் சேவைகளை 6 மாதங்களுக்கு பொது பயன்பாட்டு சேவைகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தொழிலக சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆன்லைனில் தங்கம் விற்க கடைகள் தீவிரம் :

ஊரடங்கு உத்தரவு காரணமாக நகைக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் வரும் அட்சய திருதியை தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள் ஆன்லைனில் தங்கத்தை விற்பனை செய்யவுள்ளனர்.

காவல்துறை அதிகாரிகள் நியமனம் :

தமிழகத்தில் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் விவசாயிகள், வணிகர்கள் ஆகியோர் அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி கொண்டு செல்வதை கண்காணிக்க, காவல்துறை அதிகாரிகள் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டச் செய்திகள்
இலவச சாப்பாடு :

சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் அனைத்திலும் இலவச சாப்பாடு வழங்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

பேக்கரி கடைகள் திறக்க அனுமதி :

நெல்லை மாவட்டத்தில் பேக்கரி கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்
சிபிஎல் டி20 போட்டி :

சிபிஎல் டி20 போட்டியில் ஜமைக்கா அணியிலிருந்து செயிண்ட் லுசியா அணிக்கு கிறிஸ் கெயில் மாறியுள்ளார்.



Bright Zoom Today News ஏப்ரல் 24 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஏப்ரல் 24 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on April 24, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.