ஏப்ரல் 24 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஏப்ரல் 24 மாலை நேரச் செய்திகள்

வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் முழு ஊரடங்கு.. தமிழக முதல்வர் உத்தரவு - செய்திகள் !

உலகச் செய்திகள்
  மெசஞ்சர் செயலி :

பேஸ்புக் நிறுவனம் சிறுவர்களுக்கென பிரத்யேகமாக மெசஞ்சர் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

சூரிய ஒளி கொரோனா வைரஸை அழிக்கிறது :

சூரிய ஒளி கொரோனா வைரஸை விரைந்து அழிப்பதாக, அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மாநிலச் செய்திகள்
முழு ஊரடங்கு :

சென்னை, கோவை, மதுரை, சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, கோவை மற்றும் மதுரையில் 26ஆம் தேதி காலை முதல் 29ஆம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், சேலம், திருப்பூரில் 26ஆம் தேதி காலை முதல் 28ஆம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

  திருப்பி அனுப்பப்படும் :

சரியாக செயல்படாத கொரோனா பரிசோதனை கருவிகள் திருப்பி அனுப்பப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்; வர்தன் கூறியுள்ளார்.

தமிழக அரசு அறிவிப்பு :

கொரோனா வைரஸ் தொற்றை அறிவிக்கத்தக்க நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மக்களின் முயற்சியே காரணம் :

கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ளும் இந்தியாவை உலக நாடுகள் புகழ்ந்து பேச மக்களின் முயற்சியே காரணம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் :

கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என்று டெல்லி முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
மாவட்டச் செய்திகள்
கொட்டகை முகூர்த்தம் விழா ரத்து :

கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மதுரை சித்திரைத் திருவிழாவின் துவக்க நிகழ்வான கொட்டகை முகூர்த்தம் நேற்று நடத்தப்படவில்லை.

அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் :

சென்னை, ஆவடி நகராட்சியில் உள்ள காய்கறி கடைகள், இறைச்சிக் கடைகள் அனைத்தையும் முழுமையாக மூட உத்தரவிடப்பட்டது. மேலும் 50 சிறிய வகை வாகனங்களின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என ஆணையர் தெரிவித்துள்ளார்.

  முழுமையான ஊரடங்கு :

கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கிருமிநாசினி தெளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
கிரிக்கெட் போட்டி நடைபெறாது :

கொரோனா தாக்குதலின் தீவிரம் குறையாத காரணத்தால் இங்கிலாந்தில் ஜூலை 1ஆம் தேதி வரை கிரிக்கெட் போட்டி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 24 மாலை நேரச் செய்திகள் ஏப்ரல் 24 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on April 24, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.