Bright Zoom Today ஏப்ரல் 15 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today ஏப்ரல் 15
காலை நேரச் செய்திகள்

ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு... மத்திய அரசு அனுமதி - முக்கியச் செய்திகள் !

உலகச் செய்திகள்
உலக சுகாதார நிறுவனம் பாராட்டு :

ஊரடங்கு உத்தரவை 3ஆம் தேதி வரை நீட்டித்து இருப்பதற்காக இந்தியாவிற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

11ம் தேதி வரை ஊரடங்கு :

பிரான்சில் அடுத்த மாதம் 11ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

மாநிலச் செய்திகள்
தமிழக அரசு அறிவிப்பு :

நியாயவிலைக் கடைகளில் மே மாதத்திற்கான பொருட்கள் அனைத்தும் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே விலையில்லாமல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம் :

வேளாண் சாகுபடிகளில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், மாவட்ட வாரியாக உள்ள வேளாண் விஞ்ஞானிகளை விவசாயிகள் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை :

தமிழகத்தில் இன்று முதல் இரு நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்ய வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசு அனுமதி :

ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு மக்கள் நெருக்கம் குறைவான தொலைதூரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செயல்படும் தொழிற்சாலைகள் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

பேருந்துகள் இயக்கப்படாது :

தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல அரசுப் பேருந்துகள் இயக்கப்படாது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ரயில் சேவைகள் ரத்து :

ஊரடங்கு காரணமாக மே 3ஆம் தேதி வரை பயணிகள் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
ரூ.500 உடனடி அபராதம் :

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 உடனடி அபராதம் விதித்தும், சாலையில் காரணமின்றி சுற்றியவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் :

காவல்துறை அனுமதி அளிக்காததால் இன்று நடைபெற இருந்த கூட்டணிக் கட்சி கூட்டம் ரத்து செய்யப்பட்டு, வியாழக்கிழமை காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாளை முதல் கட்டாயம் :

சேலம் மாநகராட்சி பகுதியில் வீட்டை விட்டு வெளியே வந்தால் மாஸ்க் அணிவது நாளை முதல் கட்டாயமாகிறது. மாஸ்க் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

150 பார்சல்கள் :

அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சுவாசக்கருவிகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் அடங்கிய 150 பார்சல்கள் சென்னைக்கு சரக்கு விமானங்கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்
துணைத் தலைவர் பதவி ராஜினாமா :

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மஹிம் வர்மா இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.



Bright Zoom Today ஏப்ரல் 15 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today ஏப்ரல் 15  காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on April 15, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.