Bright Zoom Today News ஏப்ரல் 17 மாலை நேரச் செய்திகள்.

Bright Zoom Today News
ஏப்ரல் 17 மாலை நேரச் செய்திகள்.

காலை 7 மணிக்கு பிறகு.. வாகனங்கள் நுழைய தடை - முக்கிய செய்திகள் !

உலகச் செய்திகள்
3 வாரங்கள் நீட்டிப்பு :

கொரோனா ஊரடங்கை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.

புதிய மருத்துவ உபகரணம் :

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்கான புதிய மருத்துவ உபகரணத்தை மெர்சிடிஸ் பார்முலா ஒன் கார் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது.

மாநிலச் செய்திகள்
தமிழக அரசுக்கு அளித்துள்ளது :

கொரோனா தொற்றை கண்டுபிடிக்க 8 கோடி மதிப்புள்ள 40,032 பிசிஆர் கிட் கருவிகளை டாடா நிறுவனம் தமிழக அரசுக்கு அளித்துள்ளது.

இ-புத்தகம் வெளியீடு :

ஊரடங்கு உத்தரவு காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் அனைத்து வகுப்புகளுக்கும் இ-புத்தகம் இணையதளத்தில் வெளியிட அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் முதற்கட்டமாக 10, 11, 12ம் வகுப்புகளுக்கு இ-புத்தகம் வெளியிடப்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு வெளியீடு :

கொரோனா பாதித்தவர்கள் வசிக்கும் வட்டாரத்தில் நோய் அறிகுறி உள்ள அனைவரையும் பரிசோதிக்க வேண்டும் என்ற புதிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்பு :

தமிழகத்தில் தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி அறிவிப்பு :

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண்துறைக்கும், தொழில்துறைக்கும் கடன் வழங்குவதற்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மத்திய அரசு விலக்கு :

கொரோனா ஊரடங்கில் கிராமப்புறக் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட வேறு சில அம்சங்களுக்கும் மத்திய அரசு விலக்களித்துள்ளது.

மத்திய அரசு அனுமதி :

இரண்டாம் கட்ட ஊரடங்கின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வரும் 20ஆம் தேதி மின்னணு வர்த்தக தளங்கள் மூலமாக மொபைல் போன், டிவி, ப்ரிட்ஜ், லேப்டாப் உள்ளிட்டவற்றை ஆன்லைனில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மாவட்டச் செய்திகள்
சென்னை மாநகராட்சி முடிவு :

சென்னையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை 3 பகுதிகளாக பிரித்து பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கடுமையான விதிகளை அமல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இருசக்கர வாகனங்கள் நுழைய தடை :

சென்னை கோயம்பேடு சந்தையில் காலை 7 மணிக்கு பிறகு இருசக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

24,000 சோதனை கிட்கள் :

விரைவாக கொரோனா நோய்த்தொற்றைக் கண்டறியும் 24,000 சோதனை கிட்கள் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

விளையாட்டுச் செய்திகள்
கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவிப்பு :

அடுத்த அறிவிப்பு வரும்வரை ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படுகிறது என்று கூறிய நிலையில், எங்கள் நாட்டில் நடத்தலாம் என இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.



Bright Zoom Today News ஏப்ரல் 17 மாலை நேரச் செய்திகள். Bright Zoom Today News  ஏப்ரல் 17 மாலை நேரச் செய்திகள். Reviewed by Bright Zoom on April 17, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.