மே 02 காலை நேரச் செய்திகள் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை


Bright Zoom Today
மே 02 காலை நேரச் செய்திகள்
முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை - முக்கியச் செய்திகள் !


உலகச் செய்திகள்
புகைப்படத்தை வெளியிட்டது வடகொரியா அரசு :

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக புகைப்படத்தை வடகொரியா அரசு வெளியிட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
டோக்கன்கள் வழங்கப்படுகிறது :

தமிழகத்தில் மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களைப் பெறுவதற்கான டோக்கன்கள் இன்றும், நாளையும் வழங்கப்படுகிறது.

இன்று காலை 11 மணிக்கு... :

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கவுள்ளது.

கோவா அரசு அறிவிப்பு :

முகக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல், ரேஷன் பொருட்கள் இல்லை என கோவா அரசு அறிவித்துள்ளது.

பிரதமர் கல்வித்துறையினருடன் ஆலோசனை :

தேசிய கல்விக்கொள்கை மற்றும் கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி கல்வித்துறையினருடன் ஆலோசனை நடத்தினார்.

மத்திய அரசு உத்தரவு :

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அனைவரும் தங்களின் மொபைல் போனில் 'ஆரோக்கிய சேது" செயலியை வைத்திருப்பது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மோடி உத்தரவு :

வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்குத் தடையற்ற மின்விநியோகம் செய்யுமாறு மின்துறையினருக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

தூய்மை தொழிலாளர்கள் பணிநீக்கம் :

திருப்பதி கோவிலில் பக்தர்கள் அனுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டதால் தேவஸ்தானத்தில் பணியாற்றிய 1,400 ஒப்பந்த தூய்மை தொழிலாளர்கள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

துப்பாக்கி சண்டை :

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படை மற்றும் பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

6 சிறப்பு ரயில்கள் :

வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக ரயில்வே நேற்று (வெள்ளிக்கிழமை) 6 சிறப்பு ரயில்களை இயக்கியது.

இன்று ஆலோசனை :

வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
மாவட்டச் செய்திகள்
சிறப்பு மருத்துவக்குழு வாகனங்கள் :

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், கர்ப்பிணிப் பெண்கள், இதய நோயாளிகள் உள்ளிட்டோருக்கு வீடு தேடிச் சென்று மருத்துவ உதவிகள் வழங்கும் சிறப்பு மருத்துவக்குழு வாகனங்களை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தொடங்கி வைத்தார்.
விளையாட்டுச் செய்திகள்
கூட்டமைப்பு முடிவு :

தேசிய சைக்கிள் பயிற்சி முகாமை டெல்லியில் இருந்து இம்பாலுக்கு மாற்ற இந்திய சைக்கிள் பந்தய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.



மே 02 காலை நேரச் செய்திகள் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை மே 02 காலை நேரச் செய்திகள்  முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை Reviewed by Bright Zoom on May 02, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.