Bright Zoom Today மே 12 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today
மே 12 காலை நேரச் செய்திகள்


இன்று தொடங்குகிறது... ரயில் போக்குவரத்து - முக்கியச் செய்திகள் !

உலகச் செய்திகள்
இந்தியாவிற்கு கொண்டுவர திட்டம் :

சீனாவில் தனது ஐபோன்களை உற்பத்தி செய்து வந்த ஆப்பிள் நிறுவனம், தனது ஒட்டுமொத்த ஐபோன் உற்பத்தியில் ஐந்தில் ஒரு பகுதியை சீனாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

மாநிலச் செய்திகள்
தமிழக அரசு தெரிவிப்பு :

துக்க நிகழ்வு, மருத்துவக் காரணங்களுக்கு வெளியூர் செல்ல அனுமதி கோரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலித்து ஒரு மணி நேரத்திற்குள் அனுமதி சீட்டு வழங்குவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இன்று தொடங்குகிறது :

பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து இன்று தொடங்குகிறது. சென்னை, பெங்க;ரு உள்ளிட்ட இருவேறு வழித்தடங்களில் 30 ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ருபுஊ உத்தரவு :

கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதால் தேர்வுகள், கல்வி தொடர்பாக மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், குறைகளை தீர்ப்பதற்காக தனிப்பிரிவை தொடங்கும்படி பல்கலைக்கழகங்களை ருபுஊ கேட்டுக் கொண்டுள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை :

கேரளாவில் 14ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்பதால், 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

47 நாட்களுக்கு பிறகு :

தமிழகத்தில் 47 நாட்களுக்கு பிறகு நகைக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி நகை வியாபாரிகள், ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர்.

நிதி அமைச்சகம் விளக்கம் :

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய குறைப்பு செய்யும்படி, அரசுக்கு எந்த பரிந்துரையும் அளிக்கப்படவில்லை என்று மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

பதிவிறக்கம் செய்ய உத்தரவு :

அரசு போக்குவரத்துக்கழக டிரைவர், கண்டக்டர்கள் அலைபேசியில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் :

ஓய்வுபெறும் வயது நீட்டிக்கப்பட்டாலும் நடப்பாண்டுக்கான தேர்வு அட்டவணையில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

விரைவில் தொடங்கப்படலாம் :

இந்தியாவில் ரயில் சேவையை தொடர்ந்து அடுத்து விமான சேவையும் விரைவில் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதியில்... :

34 வகையான கடைகளைத் திறக்கலாம் என்ற தமிழக அரசின் உத்தரவையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பெரும்பாலான கடைகள் நேற்று திறக்கப்பட்டன.
மாவட்டச் செய்திகள்
நிறுத்தி வைப்பு :

நெல்லை கூடங்குளம் முதலாவது அணு உலையில் பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
சானியா மிர்சா தேர்வு :

பெட் கோப்பை டென்னிஸ் போட்டியில், இதயம் கவர்ந்த வீராங்கனையாக சானியா மிர்சா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தீபா மாலிக் ஓய்வு :

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய தடகள வீராங்கனை தீபா மாலிக் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.



Bright Zoom Today மே 12 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today  மே 12 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on May 12, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.