Bright Zoom Today மே 14 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today
மே 14 காலை நேரச் செய்திகள்


4 மாதங்களுக்கு... கால அவகாசம் நீட்டிப்பு - முக்கியச் செய்திகள் !

உலகச் செய்திகள்
ஒருங்கிணைந்த நடவடிக்கை :

பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

சீனா விளக்கம் :

இந்தியா - சீன எல்லைப் பகுதியில், இருநாட்டு படைகளுக்கு இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், வழக்கமான ரோந்துப் பணியில் தான் தங்கள் படையினர் ஈடுபட்டுள்ளதாக, சீனா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
3 லட்சம் கோடி கடன் :

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பிணையில்லாமல் 3 லட்சம் கோடி கடன் வழங்குவது உட்பட, பல்வேறு பொருளாதார ஊக்குவிப்பு சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

4 மாதங்களுக்கு... :

2019 - 2020ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு :

அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என்றும், இதனால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை ரத்து :

பயணிகள் ரயில்களின் இயக்கம் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று திறப்பு :

வைகாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை இன்று (மே 14) திறக்கப்படுகிறது.

பொது நுழைவுத்தேர்வு :

இன்ஜினீயரிங் உட்பட தொழிற்படிப்புகளுக்கு ஜூலை 30ஆம் தேதி மற்றும் 31ஆம் தேதிகளில் பொது நுழைவுத்தேர்வு நடைபெறும் என்று கர்நாடக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் அறிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களை பெற ஆணை :

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து அங்கீகரிக்கப்பட்டவர்கள், ஆதார் எண்ணை காட்டி, ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற ஆணையிடப்பட்டு உள்ளது என, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

நஷ்டம் ஏற்படுவதை தடுக்க புதிய திட்டம் :

தெலுங்கானாவில் விவசாயிகள் இனி எப்போது, எந்த பயிர் பயிரிட வேண்டும்? என்பது குறித்து அம்மாநில அரசு ஆலோசனை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டு தலங்களை திறக்க வாய்ப்பு :

மே 17ஆம் தேதிக்கு பின் வழிபாட்டு தலங்களை திறக்க வாய்ப்புள்ளதால், திருப்பதி கோவிலில் சமூக இடைவெளியுடன் பக்தர்களை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
மாவட்டச் செய்திகள்
முட்டை கொள்முதல் விலை உயர்வு :

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.3.35ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
கேப்டனாக பாபர் அசாம் நியமனம் :

பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Bright Zoom Today மே 14 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today   மே 14 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on May 14, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.