Bright Zoom Today New
மே 11காலை நேரச் செய்திகள்
அனைத்து மாநில முதல்வர்களுடன்... பிரதமர் இன்று ஆலோசனை - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
அமெரிக்கா முடிவு :
சவுதி அரேபியாவிலிருந்து பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை திரும்பப் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
மாநிலச் செய்திகள்
வரும் 13ஆம் தேதி... :
தமிழக முதலமைச்சர் பழனிசாமி வரும் 13ஆம் தேதி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
மாநில முதல்வர்களுடன்... ஆலோசனை :
அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
மத்திய அரசு வெளியீடு :
ஆந்திரா பிளாஸ்டிக் தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து 11 பேர் பலியான சம்பவத்தின் எதிரொலியாக, தொழிற்சாலைகள் திறப்புக்கான புதிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இன்று முதல்... :
இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்க அனுமதிக்கப்பட்ட கடைகளின் பட்டியலை வெளியிட்டுள்ள தமிழக அரசு சலூன் கடைகள், பியூட்டி பார்லர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
இன்று ஆலோசனை... :
பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
வெளியில் வர வேண்டாம் :
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும். பெரும்பாலான மாவட்டங்களில் 105 டிகிரி வெயில் கொளுத்தும் என்பதால் 2 நாட்களுக்கு பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நாளை முதல் :
டெல்லியில் இருந்து சென்னை உட்பட 15 நகரங்களுக்கு ரயில் போக்குவரத்து நாளை தொடங்குகிறது. இதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.
கட்டண நிர்ணயக்குழு உத்தரவு :
தனியார் சுயநிதி கல்லூரிகளில் ஒவ்வொரு படிப்புகளுக்கும் கல்வி கட்டணம் எவ்வளவு என்ற விவரத்தை சமர்ப்பிக்க கட்டண நிர்ணயக்குழு உத்தரவிட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும்... :
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதுவரையில், 22 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும், மேலும் 6 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
மாவட்டச் செய்திகள்
முதல்வர் உத்தரவு :
எடப்பாடி தொகுதியில் 90,000 ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச நிவாரண பொருட்கள் வழங்குமாறு கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
விலைகள் குறைந்தது :
சென்னையை அடுத்த திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை பயன்பாட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து காய்கறிகளின் விலைகள் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டுச் செய்திகள்
ஐக்கிய அரபு அமீரகமும் தற்போது விருப்பம் :
எங்கள் நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்துங்கள் என்று இலங்கை விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகமும் தற்போது விருப்பம் தெரிவித்துள்ளது.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி :
ரசிகர்கள் இன்றி பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி நடத்தப்படலாம் என்று பிரெஞ்ச் டென்னிஸ் சங்க தலைவர் பெர்னர்ட் குடிசெலி தெரிவித்துள்ளார்.

Reviewed by Bright Zoom
on
May 11, 2020
Rating:

No comments: