Bright Zoom Today News மே 14 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
மே 14 மாலை நேரச் செய்திகள்


மத்திய நிதி அமைச்சகத்தின்... 2-ம் கட்ட அறிவிப்பு  - முக்கியச் செய்திகள் !

உலகச் செய்திகள்
நாற்று நடும் பணி தீவிரம் :

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்க அறிவுறுத்தியதை தொடர்ந்து, நம்போ நகரில் உள்ள விவசாயிகள், இயந்திரங்கள் மூலம் வயல்களில் நாற்று நடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மாநிலச் செய்திகள்
உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் :

வீட்டிலிருந்து பணியாற்றும் காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ரகசிய கோப்புகளை இ-ஆபீஸ் தளத்தில் கையாளக்கூடாதென மத்திய அரசு அதிகாரிகளை உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ரூ.200 செலவினத் தொகை :

ரேஷன்கடை ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.200 செலவினத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து ஊழியர்களுக்கும் செலவினத் தொகை சென்றடைவதை உறுதி செய்ய பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முடிவு :

தனது ஊதியத்தில் 30 சதவிகிதத்தை ஓராண்டுக்கு விட்டுக்கொடுக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முடிவு செய்துள்ளார்.

நாளை மறுநாள்... :

தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக நாளை மறுநாள் சூறாவளி புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

2-ம் கட்ட அறிவிப்பு :

பிரதமரின் ரூ.20 லட்சம் கோடி பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் 2-ம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31ஆம் தேதி வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

புதிதாக 25 லட்சம் விவசாயிகளுக்கு சிசான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. சிசான் கடன் அட்டைகள் மூலம் ரூ.25 ஆயிரம் கோடி கடன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

நகர்புறத்தில் வீடு இல்லாதவர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கியுள்ளோருக்கு 3 வேலையும் சுகாதாரமான உணவு வழங்கப்படுகிறது.

மே 13ஆம் தேதி வரை 14.62 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 40 முதல் 50மூ பேருக்கு கூடுதல் பணி வழங்கப்பட்டுள்ளது.

மழை காலங்களிலும் தேசிய ஊரக வேலைத் திட்டப்பணிகளை தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மருத்துவ பரிசோதனை கட்டாயம் :

வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் அனைவருக்குமே மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அமைத்தது :

பள்ளிக்கல்வியில் கற்றல், கற்பித்தலில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆராய பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சி.ஜி.தாமஸ் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

மாவட்டச் செய்திகள்
உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டம் :

ஆம்னி பேருந்துகளில் கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என அதன் உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்
வீரர்கள் பயிற்சிக்கு திரும்ப வேண்டும் :

கிரிக்கெட் வீரர்கள் இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரத்திற்குள் பயிற்சிக்கு திரும்ப வேண்டும் என இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

Bright Zoom Today News மே 14 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  மே 14 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on May 14, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.