Bright Zoom Today News
மே 05 காலை நேரச் செய்திகள்
வரும் 18ஆம் தேதி... பள்ளிக்கல்வித்துறை திட்டம் - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
விமானம் தயாரிப்பு :
ஒலியை விட பன்மடங்கு வேகமாகச் செல்லும் குண்டு வீச்சு விமானத்தை நடப்பாண்டின் மத்தியில் தயாரித்து முடிக்க சீனா ஆயத்தமாகி வருகிறது.
மாநிலச் செய்திகள்
வரும் 18ஆம் தேதி :
தமிழகத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தத்தை வரும் 18ஆம் தேதி துவக்கவும், ஜூன் மாதத்தில் தேர்வு முடிவை வெளியிடவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல் :
மாநிலங்களுக்கிடையே சரக்குகளை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்குத் தடை ஏற்படுத்த வேண்டாம் என்று மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
ராணுவ தலைமை தளபதி நரவானே பேட்டி :
காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை அனுப்புவது உள்ளிட்ட பாகிஸ்தான் மேற்கொள்ளும் அனைத்து தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என இந்திய ராணுவ தலைமை தளபதி நரவானே எச்சரித்துள்ளார்.
வரும் 7ஆம் தேதி :
வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வரும் பணி 7ஆம் தேதி தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வருகிற 7ஆம் தேதி முதல் அனுமதி :
தமிழகத்தில் வருகிற 7ஆம் தேதி முதல் சில நிபந்தனைகளுடன் மதுக்கடைகள் திறக்கப்படவுள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் திறந்து இருக்கும் என்றும், பார்-கள் இயங்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு உத்தரவு :
தமிழகத்தில் சிக்கித்தவிக்கும் வெளிமாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உதவுவதற்காக ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கிருமி நீக்கம் செய்யும் கோபுரம் :
விமான நிலையம், வணிக வளாகம், மெட்ரோ ரயில் நிலையம், ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், 'அல்ட்ரா வைலட்" எனப்படும், புற ஊதாக்கதிர்கள் மூலம் கிருமி நீக்கம் செய்யும் கோபுரத்தை டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி உள்ளது.
அறிவிப்பாணையை வெளியிட்டது தேடல் குழு :
சென்னை பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணையை தேடல் குழு வெளியிட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
இன்று முதல்... :
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை காய்கறி, மளிகை இல்லாத இதர கடைகளையும் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக கலெக்டர் மெகராஜ் கூறியுள்ளார்.
உற்சவ விழா ரத்து :
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலின் வசந்த உற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
போட்டியை தள்ளிவைக்க வேண்டும் - ஜாசன் ராய் :
அணிகள் தயாராக கால அவகாசம் கிடைக்காவிட்டால், 20 ஓவர் உலக கோப்பை போட்டியை தள்ளிவைக்க வேண்டும் என்று இங்கிலாந்து வீரர் ஜாசன் ராய் தெரிவித்துள்ளார்.
Bright Zoom Today News மே 05 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
May 05, 2020
Rating:
Reviewed by Bright Zoom
on
May 05, 2020
Rating:


No comments: