Bright Zoom Today News மே 06 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
மே 06 மாலை நேரச் செய்திகள்



விலையில்லாமல் பெற்று கொள்ளலாம்... தமிழக அரசு அறிவிப்பு - செய்திகள் !

உலகச் செய்திகள்
கடைசி சூப்பர் மூன் :

இந்தாண்டின் நான்காவது மற்றும் கடைசி சூப்பர் மூன் நிகழ்வு வானில் நாளை (7ஆம் தேதி) தெரிய உள்ளது.

தீ விபத்து :

யுஏஇ எனப்படும் ஐக்கிய அரசு அமீரகத்தின் 3வது பெரிய நகரமான ஷார்ஜாவில் உள்ள 49 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அதில் குடியிருந்த 300 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டன.
மாநிலச் செய்திகள்
தமிழக அரசு அறிவிப்பு :

நீர் நிலைகளில் உள்ள களிமண், வண்டல் மண், சவுடு மண், சரளை மண் ஆகியவற்றை விலையில்லாமல் பெற்று கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு அரசாணை வெளியீடு :

வெளிமாநிலத்தவர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்புவதற்கான வழிகாட்டு முறைகளை அரசாணையாக வெளியிட்டுள்ள தமிழக அரசு, போக்குவரத்திற்கான செலவை அந்தந்த மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப், இமெயிலில்... :

மருந்து, மாத்திரைகளை எளிதில் பெற வாட்ஸ்அப் மற்றும் இமெயில் மூலமாகவும் மக்கள் ஆர்டர் கொடுக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு :

கேரளாவில் மே 17ஆம் தேதி வரை மதுக்கடைகள் திறக்கப்படாது என முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்கள் ரத்து :

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவை கட்டுமானத்தொழில் அதிபர்கள் சந்தித்து பேசியதை அடுத்து வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கான சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தண்டனைக்குரிய குற்றமாக அறிவிப்பு :

உத்தரப் பிரதேசம் மாநிலம் கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் செல்பேசியில் ஆரோக்கிய சேது செயலி இல்லாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு :

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காய்கறி விலை உயரும் அபாயம் :

சென்னையில் பெரிய மார்க்கெட்டான கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டுள்ளதால் புதுவையில் காய்கறி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும்... :

மே 5ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் ஏறத்தாழ 39 கோடி பேர் மத்திய அரசிடம் இருந்து 34,800 கோடி ரூபாயை நிவாரணமாக பெற்றுள்ளனர்.
மாவட்டச் செய்திகள்
குடிநீர் வழங்க ஏற்பாடு :

சென்னையில் இனி லாரிகளுக்கு பதில், குழாயில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி அறிவித்துள்ளார். 1,000 தெருக்களில் மொத்தம் 700ஆடுனு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
நூறு பந்து தொடர் :

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளர்கள் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் நூறு பந்து தொடரில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Bright Zoom Today News மே 06 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  மே 06 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on May 06, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.