Bright Zoom Today News மே 07 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
மே 07 காலை நேரச் செய்திகள்



அடுத்த மாதம் இறுதி வரை... கால அவகாசம் நீட்டிப்பு - முக்கியச் செய்திகள்

உலகச் செய்திகள்
நிலநடுக்கம் ஏற்பட்டது :

இந்தோனேஷியாவின் மாலுகு மாகாணத்தில் நேற்று 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை மற்றும் புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
விரைவில் தொடங்கப்படலாம் :

சில வழிகாட்டு நெறிமுறைகளுடன் பொது போக்குவரத்து விரைவில் தொடங்கப்படலாம் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் இறுதி வரை... :

பிப்ரவரி முதல் காலாவதியான ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகன உரிமங்களை அடுத்த மாதம் இறுதி வரை புதுப்பித்துக்கொள்ள, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்பு :

தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில், இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீண்டும் வழங்க முடிவு :

தமிழக ரேஷன் கடைகளில் 1,000 ரூபாய் நிவாரணத்தொகை வாங்காத அட்டைதாரர்களுக்கு, மீண்டும் வழங்க உணவு துறை முடிவு செய்துள்ளது.

மாநில அரசு அறிவிப்பு :

மும்பை, புனேயில் 5 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

பதிவிறக்கம் செய்வது கட்டாயம் :

ஸ்மார்ட்போனில் ஆரோக்கிய சேது செயலியை 9 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர் எனவும், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் அந்த செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு :

கட்டுமானப் பணிகள் துவங்கியுள்ள நிலையில் சிமெண்ட், செங்கல், எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது.

புத்த பூர்ணிமா விழா :

இன்று நடைபெறும் புத்த பூர்ணிமா விழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.

சிபிஎஸ்இ முடிவு :

சிபிஎஸ்இ பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மேலும் கற்பித்தல் திறன் பெறுவதற்காக ஆன்லைன் மூலம் ஆசிரியர் பயிற்சி அளிக்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு தடை :

ஆல்கஹாலைக் கொண்டு தயாரிக்கப்படும் சானிட்டைசர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
குடிநீர் கூடுதலாக வழங்கப்படும் :

சென்னை மக்களுக்கு இன்று முதல் 50 கோடி லிட்டர் குடிநீர் கூடுதலாக வழங்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

காவல்துறை எச்சரிக்கை :

சென்னை மாநகர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அண்டை மாவட்டங்களுக்கு மது வாங்கச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்
ஓராண்டுக்கு நீட்டிப்பு :

மெரில்போன் கிரிக்கெட் கிளப்பின் தலைவராக இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்கரா மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளார்.



Bright Zoom Today News மே 07 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  மே 07 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on May 07, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.