Bright Zoom Today News
மே 07 மாலை நேரச் செய்திகள்
தலா ரூ.1 கோடி நிவாரணம்.....
அடுத்த 48 மணி நேரத்தில்... இடியுடன் கூடிய மழை - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
இந்தியாவில் தொழில் தொடங்க முயற்சி :
சீனாவில் இருந்து வெளியேறும் ஆயிரத்துக்கு மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்களை இந்தியாவில் தொழில் தொடங்கச் செய்வதற்கு முயற்சி நடைபெற்று வருகிறது.
மாநிலச் செய்திகள்
தமிழக அரசு உத்தரவு :
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து 59ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை வானிலை மையம் தெரிவிப்பு :
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவையில் முடிவெடுக்கப்படும் :
புதுச்சேரியில் மதுக்கடைகளை திறப்பது குறித்து அமைச்சரவையில் முடிவெடுக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி பேட்டியளித்துள்ளார்.
தலா ரூ.1 கோடி நிவாரணம் :
ஆந்திராவில் விஷவாயுக் கசிவால் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி இரங்கல் :
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜோமோட்டோ திட்டம் :
இந்தியாவில் ஹோட்டல் உணவை வாடிக்கையாளர்களிடம் நேரடியாக டெலிவரி செய்யும் தொழிலில் முன்னணியிலுள்ள ஜோமோட்டோ (ணழஅயவழ) நிறுவனம், மதுவகைகளை நேரடியாக டெலிவரி செய்யும் தொழிலில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.
இணையதளம் முடங்கியது :
வெளிநாடுகளில் சிக்கி உள்ள இந்தியர்கள், நாடு திரும்புவதற்கான முன்பதிவை போட்டி போட்டுக் கொண்டு மேற்கொண்டதை தொடர்ந்து வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளம் முடங்கியது.
நாளை முதல்... சர்வதேச விமான சேவை தொடக்கம் :
நாளை முதல் இந்தியாவில் இருந்து லண்டன், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவுக்கு செல்பவர்கள் தற்போது முன்பதிவு செய்யலாம் என்று ஏர் இண்டியா தெரிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
5 பேருக்கு மேல் கூடக்கூடாது :
ஈரோட்டில் மதுபானங்கள் வாங்க குடையுடன் வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மதுக்கடையில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
ராபின் சிங், பிராத்வைட்... விடுவித்தது :
கரீபியன் பிரிமீயர் லீக் அணியான செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி ராபின் சிங், பிராத்வைட் ஆகியோரை விடுவித்துள்ளது.

Bright Zoom Today News மே 07 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
May 07, 2020
Rating:
Reviewed by Bright Zoom
on
May 07, 2020
Rating:

No comments: