Bright Zoom Today News மே 08 காலை நேரச் செய்திகள்

Bright  Zoom Today News
மே 08 காலை நேரச் செய்திகள்



இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு உத்தரவு - காலைச் செய்திகள் !


உலகச் செய்திகள்
முதல் முறையாக... :

உலகின் தூங்காநகரம் என்றழைக்கப்படும் நியூயார்க் நகரில் கடந்த 115 ஆண்டுகளாக 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் சுரங்கப்பாதை ரயில்கள் முதல் முறையாக தங்கள் பின்னிரவு சேவைகளை நிறுத்தியுள்ளன.

மசூதிகள் திறப்பு :

வங்கதேசத்தில் ஒன்றரை மாதமாக மூடப்பட்டு கிடந்த மசூதிகள் மீண்டும் தொழுகைக்காக திறக்கப்பட்டுள்ளன.
மாநிலச் செய்திகள்
ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் :

பள்ளிகள் திறக்கப்படும் போது 50 சதவீத மாணவர்களே வகுப்புகளில் இருக்கும் வகையில் ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்பீடு போஸ்ட் சேவை :

15 நாடுகளுக்கு ஸ்பீடு போஸ்ட் சேவையை மீண்டும் துவக்கி உள்ளதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு உத்தரவு :

செமஸ்டர் தேர்வு ஜூலைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், அனைத்து பாடங்களையும் 'ஆன்லைனில்" நடத்தி முடிக்க, இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உணவுத் துறை அறிவிப்பு :

மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறையாக இருந்தாலும், இன்று ரேஷன் கடைகள் வழக்கம் போல செயல்படும் என தமிழக உணவுத் துறை அறிவித்துள்ளது.

இ-டோக்கன் முறை :

டெல்லியில் மதுபான விற்பனைக்காக இ-டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சமூக விலகலை கடைபிடிக்கும் வகையிலும், மதுபானக் கடைகளில் கூட்டம் வருவதைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்கள் ஏற்பாடு :

தமிழகத்தில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களை ஏற்றிச் செல்ல 7 சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சென்னை, கோவை, வேலூரில் இருந்து வடமாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல் :

ஆலைகளைத் திறக்கும்போது தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக்கூடாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

வலைதளத்தில் வெளியிட திட்டம் :

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், இந்த ஒரு ஆண்டில் செய்த சாதனைகளை சமூக வலைதளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

13 சிறப்பு ரயில்கள் :

கர்நாடகத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல 13 சிறப்பு ரயில்களை இயக்கும்படி ரயில்வே துறையை மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மாவட்டச் செய்திகள்
ஆற்றில் இறங்கும் வைபவம் ரத்து :

மதுரையில் புகழ்பெற்ற அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற நிகழ்வுகள் ஆகம விதிப்படி நடைபெறும் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
டென்னிஸ் போட்டி ரத்தாக வாய்ப்பு :

அடுத்த ஆண்டிற்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ரத்தாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Bright Zoom Today News மே 08 காலை நேரச் செய்திகள் Bright  Zoom Today News  மே 08 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on May 08, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.