Bright Zoom Today News மே 08 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
மே 08 மாலை நேரச் செய்திகள்



தமிழக முதல்வர் உத்தரவு - மாலைச் செய்திகள்..!!

உலகச் செய்திகள்
ஈரானில் நிலநடுக்கம் :

இன்று அதிகாலை ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 பேர் உயிரிழந்தனர் என்றும், 22 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாநிலச் செய்திகள்
அதிகாரிகளுடன் ஆலோசனை :

காய்கறி மொத்த விற்பனைச் சந்தை அமைக்க திருமழிசையில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

முதல்வர் உத்தரவு :

தமிழகத்தில் 2,570 செவிலியர்களை பணியமர்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு :

விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிந்து ஏற்பட்ட பாதிப்புக்கு முதல்கட்டமாக 50 கோடி ரூபாயை உடனடியாக செலுத்தும்படி எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச அரசு ஒப்புதல் :

தொழிலாளர் சட்டத்தில் இருந்து 3 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்திற்கு உத்தரப்பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

2 சிறப்பு விமானங்கள்... :

அபுதாபி மற்றும் துபாயில் இருந்து இந்தியர்கள் 363 பேரை அழைத்துக் கொண்டு, 2 சிறப்பு விமானங்கள் கேரளாவிற்கு இன்று வந்தடைந்தன.

மகாராஷ்டிரா அரசு முடிவு :

கல்லூரி மாணவர்களின் தேர்வை ரத்து செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.

புதிய தீவிரவாத குழு :

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தீவிரவாத செயல்களை நடத்துவது பாகிஸ்தானின் புதிய பயங்கரவாத குழுவான வுhந சுநளளைவயnஉந குசழவெ என தெரிய வந்துள்ளது.

யோகி ஆதித்யநாத் உத்தரவு :

தொழிலாளர்கள் யாரும் நடந்து வரக்கூடாது என்றும், அனைவரையும் பாதுகாப்பாக அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு :

தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாவட்டச் செய்திகள்
முதல்வர் அறிவிப்பு :

பணியின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த காவலர் சேட்டு குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்
பிசிசிஐ தெரிவிப்பு :

தேவைப்பட்டால் ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்திக் கொள்வார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Bright Zoom Today News மே 08 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  மே 08 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on May 08, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.