Bright Zoom Today News
மே 09 காலை நேரச் செய்திகள்
வரும் 11ஆம் தேதி முதல் அனுமதி தமிழக அரசு அறிவிப்பு - காலைச் செய்திகள் !
உலகச் செய்திகள்
சீன அரசு தடை :
வெளிநாட்டு கட்டிடங்களை அச்சு அசலாக கட்டமைப்பதை சீன அரசு தடை செய்துள்ளது.
மாநிலச் செய்திகள்
மத்திய அரசு அறிவிப்பு :
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு எஞ்சியுள்ள பாடங்களுக்கான தேர்வுகள் ஜூலை 1ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை நடத்தப்படுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு அறிவிப்பு :
சினிமா, டெலிவிஷன் துறைகளில் தயாரிப்புக்கு பிந்தைய பணிகளுக்கு வருகிற 11ஆம் தேதி முதல் அனுமதி அளிப்பதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி எடிட்டிங், டப்பிங், பின்னணி இசை போன்ற வேலைகளை தொடங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலமாக மட்டும்... விற்க அனுமதி :
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம், ஆன்லைன் மூலமாக மட்டும் மது வகைகளை விற்றுக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.
மாநில அரசு அதிரடி :
தெலுங்கானாவில் முகக்கவசம் இன்றி வெளியே வந்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் :
அனைத்து வணிக நிறுவனங்களையும் திறக்க தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.
இன்று மழைக்கு வாய்ப்பு :
தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
பாதுகாப்பான நிலையில் உள்ளது :
நச்சுவாயு கசிவு ஏற்பட்ட ஆந்திர ஆலையில் உள்ள வேதிப்பொருள் கிடங்குகள் அனைத்தும் பாதுகாப்பான நிலையில் உள்ளதாக விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வி.வினய் சந்த் தெரிவித்துள்ளார்.
மின் வாரியம் அறிவுறுத்தல் :
வீடு உள்ளிட்ட கட்டுமானங்களுக்கு, புதிய மின் இணைப்பு வழங்கும் பணியை விரைந்து மேற்கொள்ளும்படி, பிரிவு அலுவலக பொறியாளர்களை மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
மாவட்டச் செய்திகள்
காய்கறி விலை உயர்வு :
சென்னையில் கோயம்பேடு சந்தை மூடப்பட்டதால் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
அனுமதிக்கப்பட்ட நாட்களில் மட்டுமே செல்ல வேண்டும் :
காஞ்சிபுரம் நகராட்சி பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்ட நாட்களில் மட்டுமே செல்ல வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
இன்று நேரில் ஆய்வு :
சென்னையை அடுத்த திருமழிசையில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தையை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.
ரோஜா கண்காட்சி ரத்து :
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் ரோஜா கண்காட்சி (8, 9, 10ஆம் தேதிகளில் நடைபெற இருந்த அதாவது நேற்று, இன்று, நாளை) ரத்து செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
10 ஓவர் கிரிக்கெட் பொருத்தமானது :
ஒலிம்பிக் போட்டிக்கு 10 ஓவர் கிரிக்கெட்டுதான் பொருத்தமானதாக இருக்கும் என இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
Bright Zoom Today News மே 09 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
May 09, 2020
Rating:
Reviewed by Bright Zoom
on
May 09, 2020
Rating:


No comments: