Bright Zoom Today News மே 09 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
மே 09 மாலை நேரச் செய்திகள்

திங்கட்கிழமை முதல்.. தமிழகம் முழுவதும் நீட்டிப்பு... - முக்கியச் செய்திகள் !



உலகச் செய்திகள்
கிரீன் கார்டு விரைவில் :

அமெரிக்காவில் H-1B அல்லது J2 விசாவில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான இந்திய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நிரந்தர குடியுரிமைக்கான கிரீன் கார்டு விரைவில் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
உயர்நிலைக்குழு அமைப்பு :

தமிழகத்தில் பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு உத்தரவு :

தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் காய்கறிகள், மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என்றும், தேநீர் கடைகள் பார்சல்  சேவைக்கு மட்டும், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் பிற பகுதிகளில், அனைத்து தனியார் நிறுவனங்களும் 33 சதவிகித பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில்... :

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அனுமதி வழங்கல் :

கர்நாடக மாநிலம் பெங்க;ருவில் உணவு விடுதிகள், பார்கள், மதுக்கடைகளில் மதுபானங்களை விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுபானங்களை அங்கேயே அருந்த அனுமதியில்லை, எடுத்து சென்று அருந்தலாம் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்தி துவங்கியது :

தமிழகத்தில் மின் தேவை அதிகரித்துள்ள நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் உள்ள 4 அலகுகளிலும் மின் உற்பத்தி துவங்கப்பட்டது.

அரசாணை பிறப்பிப்பு :

வெளி மாநிலத்தவர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கான செலவை தொடர்புடைய மாநில அரசுகள் ஏற்காவிட்டால் தமிழக அரசே ஏற்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
ஆவின் நிறுவனம் :

வரலாற்றில் இல்லாத வகையில், ஒரே நாளில் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

ரயில்வே துறை சாதனை :

சேலம்-ஈரோடு ரயில்வே வழித்தடத்தில் 158 ஆண்டுகள் பழமையான பாலத்தை இடித்து அகற்றிவிட்டு, 36 மணி நேரத்தில் புதிய பாலத்தை ரயில்வே துறை கட்டி சாதனை படைத்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்
2 அணிகள் :

2 அணிகளை தயார் செய்ய இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் திட்டமிட்டுள்ளன.



Bright Zoom Today News மே 09 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  மே 09 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on May 09, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.