Bright Zoom Today News மே 20 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
மே 20 காலை நேரச் செய்திகள்


பள்ளிகளுக்கு... தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - காலைச் செய்திகள் !

உலகச் செய்திகள்
ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு :

ஆஸ்திரேலியாவில் 11 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் எலும்புகூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக தலைவர் :

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாநிலச் செய்திகள்
ஜூன் 6ஆம் தேதி வரை :

தமிழகத்தில் மின் கட்டணத்தை ஜூன் 6ஆம் தேதி வரை அபராதமின்றி செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு :

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் :

மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு :

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரூ.2000 நிவாரணம் :

நலவாரியத்தில் பதிவுசெய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இன்று மாலை கரையை கடக்கிறது :

ஆம்பன் புயல் பூரி - கொல்கத்தா இடையே வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆம்பன் புயல் மேற்குவங்கம் - வங்கதேசம் இடையே இன்று மாலை கரையை கடக்கிறது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் புயல் காரணமாக ஒடிசாவில் 106 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசி வருகிறது எனவும் கூறியுள்ளது.

இயக்குநர் எச்சரிக்கை :

தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரையான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில், பள்ளிகள் திறந்த பிறகு தேர்வு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆகஸ்டு 3ஆம் தேதி :

ஆந்திராவில் ஆகஸ்டு 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் :

வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் தினமும் 200 ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

நாளை முதல் :

கேரளாவில் நாளை முதல் மதுக்கடைகள் மற்றும் பார்கள் திறக்கப்பட உள்ளன.

இன்று (20ஆம் தேதி) முதல்... :

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று (20ஆம் தேதி) முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

மாவட்டச் செய்திகள்
விலை உயரும் அபாயம் :

சென்னை கொத்தவால்சாவடியில் உள்ள ஆயிரக்கணக்கான மொத்த விற்பனை கடைகள் ஒரு வாரம் மூடப்படுகின்றன. இதனால் மளிகை பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
பந்து வீச்சாளர்களுக்கு மிகக்கடினம் :

கிரிக்கெட் போட்டியில் பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டால் பந்து வீச்சாளர்களுக்கு மிகக்கடினம் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.



Bright Zoom Today News மே 20 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  மே 20 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on May 20, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.