Bright Zoom Today News
மே 20 மாலை நேரச் செய்திகள்
பொதுத்தேர்வை நடத்தி கொள்ள... மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி - மாலைச் செய்திகள் !
உலகச் செய்திகள்
முகக்கவசம் அணிவது கட்டாயம் :
ஸ்பெயினில் வீட்டை வீட்டு வெளியே வருவோருக்கு நாளை முதல் முகக்கவசம் அணிவதை அந்நாட்டு அரசு கட்டாயமாக்கியுள்ளது.
மாநிலச் செய்திகள்
மத்திய நிதியமைச்சகம் தெரிவிப்பு :
தமிழ்நாட்டின் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.295.25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரையை கடக்க துவங்கியது :
ஆம்பன் புயலின் முகப்பு பகுதி கரையை நெருங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அறிவிப்பு :
மாநிலங்கள் பொதுத்தேர்வுகள் நடத்த தடையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. சில நிபந்தனைகளுடன் தேர்வுகளை நடத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தெரிவித்துள்ளார்.
19 மீட்பு படைகள் :
ஆம்பன் புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் 19 மீட்பு படைகள் தயார் நிலையில் உள்ளன. இதில் அதிக சேதத்தை ஏற்படுத்தலாம் என கணிக்கப்பட்டுள்ள தெற்கு பர்கானா மாவட்டத்தில் 6 மீட்பு படைகள் தயாராக உள்ளன.
மத்திய அரசு நடவடிக்கை :
உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட 27 வகைப் பூச்சிக்கொல்லிகளை இந்தியாவும் தடை செய்ய உள்ளது.
நாளை முதல்... :
நாடு முழுக்க பல்வேறு இடங்களில் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் இருந்து டெல்லிக்கு சிறப்பு ரயில்கள் நாளை முதல் இயக்கப்பட உள்ளன.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் :
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
52 கிலோ எடையுள்ள பலாப்பழம் :
கேரள மாநிலம் வயநாட்டில் விவசாயி ஒருவரது தோட்டத்தில் விளைந்த பலாப்பழம் 52 கிலோ எடை உள்ளதால், அதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
தற்காலிகமாக ரத்து :
ஆம்பன் புயல் காரணமாக கொல்கத்தா விமான நிலையத்தில் சரக்கு விமான போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
31ஆம் தேதி வரை :
கரூர் மாவட்ட அம்மா உணவகங்களில், இலவசமாக உணவு வழங்குவது வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என, போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
தடையை எதிர்த்து மேல் முறையீடு :
பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் கிரிக்கெட் விளையாட மூன்று ஆண்டுகள் விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளார்.

Bright Zoom Today News மே 20 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
May 20, 2020
Rating:
No comments: