Bright Zoom Today News மே 21 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
மே 21 காலை நேரச் செய்திகள்


இன்று முதல் முன்பதிவு தொடங்கியது காலைச் செய்திகள் !

உலகச் செய்திகள்
ஈரானுக்கு எச்சரிக்கை :

அமெரிக்கா தனது போர்க்கப்பல்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருக்குமாறு ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனால் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
இன்று முதல் முன்பதிவு தொடங்கியது :

ஜூன் 1ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ள ரயில்களுக்காக முன்பதிவு இன்று தொடங்கியது. நாள்தோறும் 200 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் முன்பதிவு தொடங்கியது.

அட்டவணை வெளியீடு :

ஜூன் 1ஆம் தேதியில் இருந்து இயக்கப்படும் ரயில் கால அட்டவணை வெளியிடப்பட்டது.

வானிலை மையம் தெரிவிப்பு :

மேற்கு வங்கத்தில் இருந்து வங்கதேச எல்லைக்கு ஆம்பன் புயல் நகர்ந்தது. ஆம்பன் புயல் கடந்த 6 மணி நேரமாக 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது. நாளை காலை 11.30 மணிக்கு பிறகு காற்றின் வேகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை ஆணை :

12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்காக முதுகலை ஆசிரியர்கள் மே 26ஆம் தேதி பணிக்கு வர பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. மே 27ஆம் தேதி தொடங்கும் விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து யாருக்கும் விலக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் :

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.3,500 கோடி மதிப்பிலான உணவுப்பொருட்கள் வழங்குவது, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சலூன் கடைகள் அறிவிப்பு :

கேரளாவில் சலூன் கடைகளில் வெட்டிய முடியை வாடிக்கையாளர்களே எடுத்து செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் :

ஜம்மு-காஷ்மீரில் இருப்பிட சான்றிதழ் கொண்டவர்களுக்கு மட்டுமே அரசு பணி வழங்கப்படும் என்ற திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

விமானப் போக்குவரத்து மீண்டும் துவங்கப்படும் :

வருகின்ற மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து மீண்டும் துவங்கப்படும் என விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

பேருந்துகள் இயக்கம் :

தமிழக எல்லையான கடலூர், நாகை மாவட்டங்களை கடந்து புதுச்சேரி-காரைக்கால் இடையே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஜூன் 5ஆம் தேதி முடிவு செய்யப்படும் :

இந்தாண்டு சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கான தேதி குறித்து ஜூன் 5ஆம் தேதி முடிவு செய்யப்படும் என யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
போக்குவரத்து பாதிப்பு :

ஊட்டியில் வீசிய சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விளையாட்டுச் செய்திகள்
ஹாக்கி இந்தியா அமைப்பு அறிவிப்பு :

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சி முகாமை பெங்க;ருவில் இருந்து மாற்ற முடியாது என்று ஹாக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.

Bright Zoom Today News மே 21 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  மே 21 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on May 21, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.