Bright Zoom Today News மே 26 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
மே 26 மாலை நேரச் செய்திகள்


ஜூன் 8ஆம் தேதி முதல்... முதலமைச்சர் உத்தரவு - முக்கியச் செய்திகள்..!!


உலகச் செய்திகள்
முகாமாக மாற்றம் :

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தின் சியேட்டல் நகரில் உள்ள அமேசான் தலைமையக கட்டிடம் வீடற்றவர்களுக்கு முகாமாக மாற்றப்பட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
பணியிட மாற்றம் :

தமிழக காவல்துறையின் சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய டிஜிபியாக பிரதீப் வி பிலிப் நியமிக்கப்பட்டுள்ளார்.

வேளாண்துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரிக்கை :

வட இந்தியாவில் படையெடுத்துள்ள வெட்டுக்கிளி கூட்டத்தை அழிக்காவிட்டால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பயிர்கள் பாதிக்கப்படும் என வேளாண்துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழக அரசு உத்தரவு :

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலத்தை 61 நாட்களிலிருந்து 47 நாட்களாக குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வி துறையினருடன் முதலமைச்சர் ஆலோசனை :

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பள்ளிக்கல்வி துறையினருடன் ஆலோசனை நடத்தினார்.

வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு :

மதுரை, திருச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 104 முதல் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4 லட்சம் பேருக்கு அரசு வேலை :

ஆந்திராவில் ஒரே ஆண்டில் 4 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

பெரும் அழிவு :

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் வெட்டுக்கிளிகளால் விவசாய நிலங்கள் பெரும் அழிவை சந்தித்து வருகின்றன.

42 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள்... :

மே 1ஆம் தேதி முதல் தற்போது வரை 3,276 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் 42 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர்.

பொதுத்தேர்வுகள் நடைபெற்றது :

இன்று கேரளத்தில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றது.
மாவட்டச் செய்திகள்
ஜூன் 8ஆம் தேதி முதல் :

கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத்திற்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தாறு 1 மற்றும் 2 அணைகளிலிருந்து ஜூன் 8ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் வரை தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மீண்டும் உற்பத்தி தொடங்கியது :

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய 2வது உலையில் பழுது நீக்கப்பட்டதால் மீண்டும் உற்பத்தி தொடங்கியுள்ளது.

திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு :

கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி மக்களுக்கு உதவி செய்யுமாறு திமுகவினருக்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி :

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தேர்வாகியுள்ள விளையாட்டு வீரர்கள் 2749 பேருக்கு மத்திய அரசு தலா ரூ.30,000 அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளது.



Bright Zoom Today News மே 26 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  மே 26 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on May 26, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.