Bright Zoom Today News ஜுன் 04 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுன் 04 காலை நேரச் செய்திகள்


ஆசிரியர்களுக்கு... பள்ளிக்கல்வித்துறை  உத்தரவு - முக்கியச் செய்திகள் !

உலகச் செய்திகள்
வரும் 16ஆம் தேதி முதல் :

வரும் 16ஆம் தேதி முதல் அனைத்து சீன விமான நிறுவனங்களின் சேவைக்கும் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

நாசா விஞ்ஞானிகள் தெரிவிப்பு :

இரு விண்கற்கள் இன்றும், நாளையும் பூமிக்கு மிக அருகில் வந்து செல்லவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று உச்சி மாநாடு :

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

மாநிலச் செய்திகள்
7 நாள் தனிமை கட்டாயம்-டெல்லி அரசு :

டெல்லிக்கு விமானம், ரயில், பேருந்துகள் மூலம் வரும் பயணிகள் அனைவரும் ஏழு நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் உத்தரவு :

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்களை திறக்க அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு :

பணிபுரியும் பள்ளியிலேயே ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு :

எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது குறித்து அரசிடம் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்கு அளிக்கப்பட்ட அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல்... :

பத்தாம் வகுப்பு பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதும் மாணவர்களுக்கு இன்று முதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வழங்கப்படவுள்ளது.

மாநில அரசு அனுமதி :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சோதனை அடிப்படையில் கோவில் ஊழியர்களையும், உள்;ர் பக்தர்களையும் அனுமதிக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நிசர்கா புயல் கரையை கடந்தது :

மகாராஷ்டிரத்தை அச்சுறுத்திய நிசர்கா புயல் நேற்று கரையை கடந்தது. அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஓரளவே பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதுடன், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

பதவிக்காலம் நீட்டிப்பு :

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும், 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செய்திகள்
மின் கட்டணம் செலுத்த அவகாசம் :

சென்னை, காஞ்சிபுரம், திருவள்;ர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து குறைவு :

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,581 கனஅடியில் இருந்து 3,118 கனஅடியாக குறைந்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்
மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவிப்பு :

தேசிய விளையாட்டு விருதிற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை வருகிற 22ஆம் தேதி வரை நீட்டித்து இருப்பதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Bright Zoom Today News ஜுன் 04 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுன் 04 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on June 04, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.