Bright Zoom Today News ஜுன் 08 காலை நேரச் செய்திகள்.

Bright Zoom Today News
ஜுன் 08 காலை நேரச் செய்திகள்.

தமிழகம் முழுவதும்... இன்று முதல் - முக்கியச் செய்திகள் !

உலகச் செய்திகள்
உலகளாவிய போராட்டம் :

அமெரிக்காவில் தொடங்கிய இனவெறிக்கு எதிரான போராட்டம் ஐரோப்பிய நாடுகளைத் தாண்டி பிரேசில், ஆஸ்திரேலியா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.
மாநிலச் செய்திகள்
தமிழகம் முழுவதும்... இன்று முதல் :

தமிழகம் முழுவதும் 75 நாட்களுக்கு பிறகு, இன்று முதல் ஹோட்டல்களில் அமர்ந்து உணவு உண்ண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரு மாநில அரசுகளும் தெரிவிப்பு :

ஆந்திர-தெலுங்கானா எல்லைகள் இன்று முதல் திறக்கப்பட உள்ளதாக இரு மாநில அரசுகளும் தெரிவித்துள்ளன.

ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பிறகு :

உள்துறை அமைச்சகம் அனுமதித்தால் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் என்று மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

பிறநாடுகள் அனுமதி அளித்த பிறகே சர்வதேச விமான சேவை :

வெளிநாட்டு விமானங்கள் நுழைவதற்கு பிறநாடுகள் அனுமதி அளித்த பிறகே சர்வதேச விமான சேவை குறித்து முடிவெடுக்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

கட்டணமின்றி மாணவர் சேர்க்கை :

அசாம் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் நடப்பு கல்வியாண்டில் எந்தவித கட்டணமின்றி மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

70 நாட்களுக்கு பிறகு :

புதுச்சேரி மாநிலத்தில் 70 நாட்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் இன்றும், நாளையும்... :

திருப்பதி ஏழுமலையான் கோவில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோவிலில் இன்றும், நாளையும் ஊழியர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் வருகின்ற ஜூன் 10ஆம் தேதி உள்;ர் பக்தர்களும், ஜூலை 11ஆம் தேதி வெளியூர் பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் திறப்பு :

கர்நாடகத்தில் 75 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கோவில்கள், ஹோட்டல்கள், மால்கள், விடுதிகள் திறக்கப்பட்டன.
மாவட்டச் செய்திகள்
சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு-மேல்நிலை முதலாமாண்டு-இரண்டாமாண்டு பொதுத்தேர்விற்கான சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

48 விமானங்கள் இயக்கம் :

சென்னை விமான நிலையத்திலிருந்து நேற்று வருகை, புறப்பாடு என 48 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன.
விளையாட்டுச் செய்திகள்
பிரிமியர் லீக் கால்பந்து :

லண்டனில் நடந்த பிரிமியர் லீக் கால்பந்து தொடருக்கான நட்பு ரீதியிலான போட்டியில் ஆர்செனல் அணி 6-0 என்ற கோல் கணக்கில் சார்ல்டன் அத்லெடிக் அணியை எளிதாக வீழ்த்தியது.

ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு :

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த தயாராக உள்ளதாக, ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.



Bright Zoom Today News ஜுன் 08 காலை நேரச் செய்திகள். Bright Zoom Today News  ஜுன் 08 காலை நேரச் செய்திகள். Reviewed by Bright Zoom on June 08, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.